100 – 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலார் என்னைப் போலவே நினைத்தார் – சிலம்பரசன்
Actor Silambarasan: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேறபைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் தொடர்ந்து கோயில்களுக்கு செல்லும் சிலம்பரசன் இன்று வடலூர் வள்ளலார் கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.

டி ராஜேந்தரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). தனது தந்தை டி ராஜேந்தரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக பலப் படங்களில் நடித்துள்ளார். இவரை அனைவரும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக பலப் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் நாயகனாக நடித்து வந்த நடிகர் சிலம்பரசன் சில ஆண்டுகளாக படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்து ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் நடிகர் சிலம்பரசன். இதனைத் தொடர்ந்து தனது உடல் எடையை குறைத்து பலருக்கு ரோல் மாடலாக மாறினார் நடிகர் சிலம்பரசன்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அதன்படி சிலம்பரசனின் 49-வது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
வள்ளலாருக்கும் எனக்கும் ஒரே எண்ணம் தான்:
தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சிலம்பரசன் கடந்த சில நாட்களாக ஆன்மீகப் பயணத்தில் உள்ளார். தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று வரும் நிலையில் இன்று வடலூர் வள்ளலார் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு சிலம்பரசன் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அதன்படி அந்த கோயில் நிர்வாகியிடம் பேசிய சிலம்பரசன், நான் ஒரு சைவ உணவு உண்பவனாக மட்டுமே வந்தேன். ஏழைகளுக்கும் குழந்தைகளுக்கும் உணவு அளிக்க விரும்புகிறேன், அதனால்தான் நான் இங்கு வந்தேன். 100/200 ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் போலவே வள்ளலாருக்கும் அதே சிந்தனை இருக்கிறது என்றும் சிலம்பரசன் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… மாஸ்க் படத்திலிருந்து வெளியானது கண்ணு முழி பாடல் வீடியோ!
இணையத்தில் கவனம் பெறும் சிலம்பரசனின் பேச்சு:
“I came as a vegetarian only😀💫. I want to feed food for people and children who are in needy, that’s why I came here♥️. Vallalar has the same thought as like me before 100/200 Yrs✨”
– #SilambarasanTR at Vadalur Vallalar Templepic.twitter.com/M3KCzMXDc4— AmuthaBharathi (@CinemaWithAB) October 7, 2025
Also Read… திருமண உறவு குறித்து அழகாக பேசிய இறுகப்பற்று படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு…!