Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளது

Silambarasan Movie Title: நடிகர் சிலமபரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளது
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Oct 2025 12:15 PM IST

நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். சிலம்பரசன் மற்றும் கமல் ஹாசனின் காம்போவை அதிகம் எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்றே விமர்சனம் எழுந்தது. படம் நன்றாக ஓடவில்லை என்றாலும் நடிகர் சிலம்பரசனின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அடுத்தடுத்தப் படங்கள் குறித்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக நடிகர் சிலம்பரசனின் 49-வது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்படி இந்தப் படம் தொடர்பான புகைப்படங்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்திற்கு பிறகு வாடிவாசல் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் சிலம்பரசன் உடனாக கூட்டணியை உறுதி செய்தது சூர்யா ரசிகர்களிடையே ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்த நிலையில் தொடர்ந்து சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள படம் குறித்த தகவல்கள் வெளியாகி வந்தது.

வட சென்னையின் அரசனாக வருகிறார் சிலம்பரசன்:

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசனின் 49-வது படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆளப்பிறந்த அரசன் வெற்றியுடன் சிலம்பரசன் என்று படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… விஷால் – சுந்தர் சி படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் அப்டேட்

தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டியூட் படத்தின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்