விஷால் – சுந்தர் சி படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் அப்டேட்
Vishal and Sundar C: இயக்குநர் சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணியில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மத கஜ ராஜா படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகவும் அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே இயக்குநராகவும் நடிகராகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் சுந்தர் சி. இவர் இயக்கும் படங்களும் நாயகனாக நடிக்கும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இறுதியாக சுந்தர் சி (Director Sundar C) இயக்கத்தில் வெளியான மத கஜ ராஜா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பாகஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. மேலும் இந்தப் படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட நிலையில் புதிதாக எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கோலிவுட் சினிமாவில் கிடப்பில் கிடக்கும் படங்கள் பலவற்றிற்கு இது எடுத்துக்காட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்ட் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல மத கஜ ராஜா படம். இந்த நிலையில் இந்தப் படத்தில் நாயகனாக நடித்த விஷால் உடன் இயக்குநர் சுந்தர் சி மீண்டும் கூட்டணி வைப்பதாக சினிமா வட்டாராங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது




விஷால் – சுந்தர் சி படத்தின் ஷூட்டிங் எப்போது?
அதன்படி சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை கயாடு லோஹர் நாயகியகா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரைகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் விஷால் – சுந்தர் சி படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இவர்களின் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகருத்துள்ளது.
Also Read… நீங்க என் அப்பா மாதிரி என்று கூறிய துருவ் விக்ரம்… நெகிழ்ந்த மாரி செல்வராஜ்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
The shooting of this film is likely to begin next month.#Vishal – #SundarC combo Again 👀 https://t.co/ZoMAJK0qhz
— Movie Tamil (@_MovieTamil) October 4, 2025
Also Read… 7 ஆண்டுகளைக் கடந்தது ராட்சசன் படம்… வைரலாகும் விஷ்ணு விஷால் எக்ஸ் பதிவு