Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

7 ஆண்டுகளைக் கடந்தது ராட்சசன் படம்… வைரலாகும் விஷ்ணு விஷால் எக்ஸ் பதிவு

7 Years of Ratsasan Movie : நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ராட்சசன். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

7 ஆண்டுகளைக் கடந்தது ராட்சசன் படம்… வைரலாகும் விஷ்ணு விஷால் எக்ஸ் பதிவு
ராட்சசன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Oct 2025 22:28 PM IST

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக வலம் வருகிறார் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal). அதன்படி வெண்ணிலா கபடி குழு படம் தொடங்கி தற்போது வரை நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.  அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2018-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ராட்சசன். இந்தப் படத்தை இயக்குநர் ராம் குமார் எழுதி இயக்கி இருந்தார். க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடிகர்கள் அமலா பால், ராதா ரவி, சங்கிலி முருகன், நிழல்கள் ரவி, காளி வெங்கட், முனிஷ்காந்த், நான் சரவணன், வினோதினி, சுசேன் ஜார்ஜ், மோனிகா, வினோத் சாகர், உஷா எலிசபெத், கஜராஜ், பசுபதி, ஜெய் ஆனந்த், தங்கம் பரமானந்தம், சஞ்சய், அபிராமி, ரவீனா தாஹா, ராகவி ரேணு, திரிஷாலா, பிரியா, ரவிசங்கர், ரேகா பத்மநாபன், கீதா நாராயணன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்த ராட்சசன் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆக்ஸஸ் பிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரிப்பாளர்கள் ஜி. டில்லி பாபு மற்றும் ஆர். ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ராட்சசன் படத்தின் கதை என்ன?

இந்தப் படத்தில் தொடர்ந்து பள்ளி குழந்தைகள் குறிப்பாக பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலையை யார் செய்கிறார்கள் என்பதை காவல்துறையினர் விசாரனை செய்து வந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் க்ரைம் த்ரில்லர் பாணியில் படத்தை இயக்க விரும்பும் நபராக விஷ்ணு விஷால் இருந்து வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக காவல்துறை அதிகாரியாகிறார்.

அதனைத் தொடர்ந்து அந்த சைக்கோ கொலையாளியை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது படத்தின் கதை. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தையும் படக்குழுவினரையும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் இன்றுடன் திரையரங்குகளில் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தின் டைட்டில் விவகாரம் – நீதிமன்றம் கொடுத்த மாஸ் உத்தரவு

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்… 18 ஆண்டுகளை நிறைவு செய்தது கற்றது தமிழ் படம்