The Girlfriend: மாறுபட்ட காதல் கதை.. ராஷ்மிகா மந்தனாவின் ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
The Girlfriend Movie Release Update: பான் இந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் முன்னணி நடிப்பிலும், இயக்குநர் ராகுல் ரவீந்தர் இயக்கத்திலும் தயாராகியுள்ள படம் தான் தி கேர்ள்ஃப்ரெண்ட். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) கன்னட சினிமாவின் மூலம் நடிகையாக நுழைந்து, தற்போது பான் இந்திய மொழி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் தொடந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக குபேரா (Kuberaa) திரைப்படம் வெளியானது. இதில் நடிகர் தனுஷிற்கு (Dhanush) ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக நடித்துவந்த படம் தி கேர்ள்ஃப்ரெண்ட் (The Girlfriend). இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் (Rahul Ravindran) இயக்கியுள்ளார். அதிரடி காதல் கதைக்களத்துடன், மிகவும் வித்தியாசமான திரைப்படமாக இந்த படம் தயாராகியுள்ளது.
இதில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ஜோடியாக நடிகர் தீக்ஷித் ஷெட்டி (Dheekshith Shetty) நடித்துள்ளார். இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பாராத நிலையில், இப்படத்தின் ரிலீஸ் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த தி கேர்ள்ஃப்ரெண்ட் படமானது வரும் 2025 நவம்பர் 7ம் தேதியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க : காதலே காதலே தனிப்பெரும் துணையே – 7 ஆண்டுகளை நிறைவு செய்தது 96 படம்
தி கேர்ள்ஃப்ரெண்ட் பட ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு :
WHO IS YOUR TYPE?
Let’s have this conversation with #TheGirlfriend in theaters from NOVEMBER 7th, 2025 ✨
In Telugu, Tamil, Hindi, Kannada, and Malayalam ❤️ #TheGirlfriendOnNov7th#WhoIsYourType@iamRashmika @Dheekshiths @23_rahulr @HeshamAWMusic… pic.twitter.com/e0mJht9RPH
— Geetha Arts (@GeethaArts) October 4, 2025
இதையும் படிங்க: ரகசியமாக நடந்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகாவின் நிச்சயதார்த்தம்.. திருமணம் எப்போது தெரியுமா?
இந்த தி கேர்ள்ஃப்ரெண்ட் திரைப்படத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனாதான் முக்கிய நாயகியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகர் தீக்ஷித் நடித்துள்ளார். இந்த படமானது கல்லூரி வாழ்கையில் வரும் காதல் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றநிலையில், அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
ராஷ்மிகா மந்தனாவின் புதிய படங்கள் :
இந்த தி கேர்ள்ஃப்ரெண்ட் படமானது வரும் 2025 நவம்பர் 7ம் தேதியில் வெளியாகும் நிலையில், பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் தமா படமானது வரும் 2025 அக்டோபர் 21ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.
இந்நிலையில் ராஷ்மிகாவின் நடிப்பில் மட்டும் இந்த 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 4 படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மைசா, அல்லு அர்ஜுனின் 22வது படம் மற்றும் காக்டைல் 2 போன்ற படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.