காதலே காதலே தனிப்பெரும் துணையே – 7 ஆண்டுகளை நிறைவு செய்தது 96 படம்
7 Years Of 96 Movie: இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் 96. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இன்று படம் தற்போது 7 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

கோலிவுட் சினிமாவில் ஒளிபதிவாளராக அறிமுகம் ஆகி தற்போது இயக்குநராக வெற்றிநடைப்போட்டு வருகிறார் பிரேம் குமார் (Director Prem Kumar). ஒளிபதிவாளராக தன்னை நிரூபித்த பிரேம் குமார் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன படம் 96. கடந்த 04-ம் தேதி அக்டோபர் மாதம் 2018-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது 7 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாவது பாகத்திற்கான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இரண்டாம் பாகத்திற்கான கதை முடிவடைந்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது தெரிவித்து இருந்தார். இந்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 96 படத்தின் பாகம் இரண்டு குறித்த அப்டேட்கள் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வரும் நிலையில் முதல் பாகம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகளை கடந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




7 ஆண்டுகளை நிறைவு செய்த 96 படத்தின் கதை என்ன?
இந்த 96 படம் பார்க்கும் ரசிகர்களை தங்களது பள்ளி பருவத்திற்கே கொண்டு சென்றது; அதன்படி 96-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்தவர்கள் ரீ யூனியனில் சந்திக்கின்றனர். அதில் தங்களது பழைய நினைவுகளை அசைபோடுவது மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருப்பனர். பள்ளியில் படிக்கும் போதே த்ரிஷாவை காதலிக்கும் விஜய் சேதுபதி அவர் மீது இருந்த காதலால் அந்த காதல் கைகூடவில்லை என்றாலும் அடுத்த திருமணம் செய்யாமல் இருக்கிறார்.
வீட்டு சூழல் காரணமாக திருமணம் செய்துகொண்ட நடிகை த்ரிஷா கிருஷ்ணன் விஜய் சேதுபதியைப் பார்த்து வருந்துகிறார். இறுதியில் அவர்கள் தங்களது காதலுக்காக என்ன எல்லாம் செய்தார்கள் என்பதைப் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.