Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இரண்டாவது முறையாக தேசிய விருது வென்ற ஜிவி பிரகஷ்… சூப்பரான கிஃப்ட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்

AR Rahman - GV Prakash Kumar: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக ஜி.வி.பிரகாஷிற்கு தேசிய விருது கிடைத்ததைத் தொடர்ந்து அவருக்கு ஏ.ஆர்.ரகுமான் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

இரண்டாவது முறையாக தேசிய விருது வென்ற ஜிவி பிரகஷ்… சூப்பரான கிஃப்ட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்
ஜிவி பிரகஷ், ஏ.ஆர்.ரகுமான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Oct 2025 13:37 PM IST

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெயில் படத்தில் இசையமைத்தன் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இசையமைத்த இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். தொடர்ந்து நடிப்பு மற்றும் இசை என இரண்டையும் பார்த்து வருகிறார். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல ஜிவி பிரகாஷின் நடிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் முன்னதாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் இசையமைத்ததற்காக முதலாவது தேசிய விருதை வென்றார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி படத்தில் இசையமைத்ததற்காக இரண்டாவது தேசிய விருதை வென்றுள்ளார். சமீபத்தில் நடைப்பெற்ற 71-வது தேசிய விருது வழங்கும் விழாவில் ஜிவி பிரகாஷ் குமார் தனது இரண்டாவது தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இதற்காக தமிழ் சினிமா உட்பட தென்னிந்திய சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஜிவி பிரகாஷிற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஏ.அர்.ரகுமான்:

இந்த நிலையில் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இரண்டாவது முறையாக தேசிய விருது வென்றதை பாராட்டி பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்து ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு. இரண்டாவது முறையாக தேசிய விருதுகளைப் பெற்றதற்காக ஏ.ஆர். ரஹ்மான் சார் இந்த அழகான வெள்ளை கிராண்ட் பியானோவை எனக்குப் பரிசளித்தார். மிக்க நன்றி சார், இது மிகவும் அர்த்தமிக்கது. முன்பு அவரே பயன்படுத்திய பியானோ. இதைவிட சிறந்த பரிசு என்னவென்று நான் கேட்க முடியும்? என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read… ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா படத்தின் புது அப்டேட் இதோ

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துட்டேன்னு சொல்லு – வைரலாகும் மம்முட்டியின் எக்ஸ் போஸ்ட்