வந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துட்டேன்னு சொல்லு – வைரலாகும் மம்முட்டியின் எக்ஸ் போஸ்ட்
Actor Mammootty: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக சிறிது நாட்கள் ஓய்வில் இருந்த மம்முட்டி தற்போது படங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.

மலையாள சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளாக தனது நடிப்பின் மூலம் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மம்முட்டி (Actor Mammootty). இவருக்கு 70 வயதைக் கடந்தாலும் தொடர்ந்து தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு போட்டியாக படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பசூகா. கடந்த 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு வெளியான இந்த பசூகா படத்தை இயக்குநர் டீனோ டென்னிஸ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் மற்றும் யூட்லி பிலிம்ஸ் சரேகமா ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி உடன் இணைந்து நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், திவ்யா பிள்ளை, சித்தார்த் பரதன், ஐஸ்வர்யா மேனன், ஷைன் டாம் சாக்கோ, சுமித் நேவல், ஹக்கிம் ஷா, சினேகா அஜித், பாமா அருண், டினு டென்னிஸ், ஜோமோன் ஜோதி, அபின் பினோ, ஜீனா சங்கர், வசிஷ்ட் உமேஷ், பினு பப்பு, மீனாட்சி ரவீந்திரன், ஜோ ஜான் சாக்கோ, பாபு ஆண்டனி, சந்தோஷ் வர்க்கி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் மம்முட்டி சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்தார். தற்போது பூரண குணமடைந்த அவர் மீண்டும் தனது படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொள்கிறார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நான் மிகவும் விரும்புவதைச் செய்யப் போகிறேன்:
இந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொள்வது குறித்து நடிகர் மம்முட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூரியதாவது, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வாழ்க்கையில் நான் மிகவும் விரும்பியதைச் செய்யத் திரும்புகிறேன். நான் இல்லாத நேரத்தில் என்னைப் பார்த்த அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. கேமரா அழைக்கிறது என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
Also Read… நீங்க இப்படி பண்ணிருக்கீங்களா… கவனம் பெறும் பிக்பாஸ் 9 தமிழ் நிகழ்ச்சியின் புது புரோமோ
நடிகர் மம்முட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Back to doing what I love most in life after a short break.Words aren’t enough to Thank everyone who checked on me during my absence.
The camera is calling… 😊 pic.twitter.com/MHJQRnF0WZ
— Mammootty (@mammukka) September 30, 2025