AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஆதார் மையங்களை தேடி அலைய வேண்டாம்.. மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ள அசத்தல் அம்சம்!

Aadhaar Centers Soon To Add In Google Maps | தற்போதைய சூழலில் ஆதார் மையங்கள் எங்கெல்லாம் செயல்படுகின்றன என்பதை கண்டுபிடிப்பதற்கே சவாலாக உள்ளது. இந்த நிலையில் தான் ஆதார் மையங்களை எளிதாக கண்டறியும் வகையில் அரசு ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

இனி ஆதார் மையங்களை தேடி அலைய வேண்டாம்.. மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ள அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Feb 2026 13:00 PM IST

இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு (Aadhaar Card) மிக முக்கிய ஆவணமாக உள்ளது. ஆதார் தொடர்பான தேவைகளும் அதிகமாக உள்ளதன் காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொதுமக்கள் ஆதார் மையங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் அரசு ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய குடிமக்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக உள்ள ஆதார் கார்டு

இந்தியாவில் உள்ள குடிமக்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. அந்த வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI – Unique Identification Authority of India) வழங்கப்படும் ஆதார் கார்டு, ஒவ்வொரு தனி மனிதருக்கான அடையாள அட்டையாக விளங்குகிறது. அரசின் சேவைகளை பெறுவது முதல் பல்வேறு தேவைகளுக்கு ஆதார் மிக முக்கிய ஆவணமாக உள்ளது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் விலை முதல் இபிஎஃப்ஓ வரை.. மார்ச் மாதத்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

ஆதாரில் முகவரி, செல்போன் எண் மாற்றுவது ஆகியவற்றை மிக சுலபமாக வீட்டில் இருந்தே மேற்கொள்ள முடியும். ஆனால், புதிய ஆதார் கார்டு எடுப்பது, ஆதாரில் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்வது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், ஆதார் மையங்கள் எங்குள்ளன என பொதுமக்கள் தேடி அலையும் சிக்கலும் உள்ளது. இந்த நிலையில் தான் மத்திய அரசு அசத்தல் முயற்சியை கையில் எடுத்துள்ளது.

இனி ஆதார் மையங்கள் கூகுள் மேப்பில்

அதாவது ஆதார் மையங்களை மக்கள் எளிதில் கண்டறியும் வகையில் கூகுள் வரைபடத்தில் அவற்றை இடம்பெற செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு ஆதார் சேவைகளை எளிதில் பெற வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : நிதி மேலாண்மைக்கு நடுத்தர வர்கத்தினர் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!

இந்த வரைபட தகவலில் வாகனம் நிறுத்துவதற்கான வசதிகள், ஆதார் மையங்கள் செயல்படும் நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் தெரிந்துக்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us