‘தாங்க மாட்டீங்க’ மம்முட்டியின் ஃபேமஸ் டயலாக்கை பாராட்டி தள்ளிய இயக்குநர்!
Director Lingusamy: தமிழ் சினிமாவில் நடிகர்கள் எப்படி டப்பிங் பேசுவது என்று மலையாள நடிகர் மம்முட்டியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரபல இயக்குநர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் ஃபேமிலி ட்ராமா, ரொமாண்டிக் ஆக்ஷன் என இயக்குநர் லிங்குசாமி (Director Lingusamy) இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஆனந்தம். கூட்டுக் குடும்பக் கதையை மையமாக வைத்து அண்ணன் தம்பி பாசத்தை மிகவும் அழகாக இந்தப் படத்தின் மூலம் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர் லிங்குசாமி. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் முரளி, அப்பாஸ், ஷியாம் கணேஷ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா, விஜயகுமார், சசிகுமார், ஷாதிகா, பூனம் சிங், பெரியார் தாசன், சேது விநாயகம், விஜய சிங், பாவா லட்சுமணன், இளவரசு, பெசன்ட் ரவி, தினந்தோரும் நாகராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்து இருந்தார். ஆனந்தம் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




மம்முட்டிய பாத்து தமிழ் நடிகர்கள் கத்துகனும்:
இந்த நிலையில் ஆனந்தம் படத்தின் இயக்குநர் லிங்குசாமி முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. அந்த பேட்டியில் லிங்குசாமி கூறியுள்ளதாவது, தமிழ் நடிகர்கள் மலையாள நடிகர் மம்முட்டியைப் பார்த்து டப்பிங் பேசுவது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதில் குறிப்பாக ஆனந்தம் படத்தில் ஒரு எமோஷ்னலான காட்சியில் நடிகர் மம்முட்டு தழதழத்த குரலில் கூறுவதைக் குறிப்பிட்ட லிங்குசாமி மம்முட்டியின் டப்பிங் திறமையை சிலாகித்து பேசினார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Wishing my first hero @mammukka sir a very happy birthday. Wishing you a healthy life with all the love & Aanandham’s IKKA ❤️ #HappyBirthdayMammukka
— Lingusamy (@dirlingusamy) September 7, 2025
Also Read… அனிருத்தின் வளர்ச்சியைப் பார்த்தா பிரமிப்பா இருக்கு – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்