ரசிகர்களின் பேரன்பிற்கு சொந்தகாரரான மம்முட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
HBD Mammootty: மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி இன்றி தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள இவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலர் மம்முட்டிக்கு தொடர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மலையாள சினிமாவில் கடந்த 1971-ம் ஆண்டு முதல் நடிகராக நடிக்கத் தொடங்கி தற்போது 50 ஆண்டுகளைக் கடந்தும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் மம்முட்டி (Actor Mammootty). மலையாள சினிமாவில் பல நூறு ஹிட் படங்களில் நடித்த நடிகர் மம்முட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் மட்டும் இன்றி ஆங்கில மொழியிலும் படங்களில் நடித்துள்ளார். சுமார் 450 படங்களுக்கு மேலே நடித்துள்ள நடிகர் மம்முட்டி தற்போது 74-வயது ஆகியும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகர் மம்முட்டி மலையாள சினிமாவில் தான் அதிகப் படங்களில் நடித்து இருந்தாலும் தென்னிந்திய மொழிகளில் இவருக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக தமிழ் சினிமாவில் மம்முட்டிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் நடித்தால் நாயனாக மட்டுமே நடிப்பேன் இல்லை என்றால் நடிக்க மாட்டேன் என்று இல்லாமல் காமெடியன், வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என நடிகர் மம்முட்டி ஏற்று நடிக்காத கதாப்பாத்திரங்களே இல்லை. எந்த கதாப்பாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்தாலும் அந்த கதாப்பாத்திரத்தை அவரைவிட சிறப்பாக வேற யாராலும் நடிக்க முடியாது என்ற எண்ணத்தை ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியவைத்துவிடுவார். அதற்கான அத்தனை அம்சங்களும் அவரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.




தமிழ் சினிமா ரசிகர்களின் பேரன்பிற்கு சொந்தகாரர் மம்முட்டி:
எந்த மொழி சினிமா ரசிகர்களாக இருந்தாலும் அவர்களின் மொழிகளில் இருக்கும் நடிகர்களை மட்டுமின்றி மற்ற மொழிகளில் சிறப்பாக நடிக்ககூடிய நடிகர்களை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாட தவறியதில்லை. அந்த வகையில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டியை தமிழ் ரசிகர்களும் கொண்டாடத் தவறவில்லை.
நடிகர் மம்முட்டி தமிழ் சினிமாவில் 1990-ம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து அழகன், தளபதி தொடங்கி இறுதியாக பேரன்பு படம் வரை சுமார் தமிழில் மட்டும் நேரடியாக 16 -படங்களில் நடித்துள்ளார். இதில் அனைத்துப் படங்களில் நாயனாக மட்டும் இல்லாமல் இரண்டாம் ஹீரோ போன்ற கதாப்பத்திரங்களையும் ஏற்று நடிகர் மம்முட்டி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… அந்த படத்திற்கு நான் சம்பளமே வாங்கவில்லை – இயக்குநர் வெற்றிமாறன்
நடிகர் மம்முட்டியின் எக்ஸ் தள பதிவு:
Love and Thanks to All and The Almighty pic.twitter.com/RKiCNHonkw
— Mammootty (@mammukka) September 7, 2025
தமிழில் கடந்த 2019-ம் ஆண்டிற்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் நடிகர் மம்முட்டி தொடர்ந்து மலையாள சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை மம்முட்டி நடிப்பில் இரண்டு படங்கள் மலையாள சினிமாவில் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் நடிகர் மம்முட்டி.
இந்த நிலையில் இன்று 07-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் மம்முட்டி தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டிவி 9 தமிழ் செய்திகளின் சார்பாக நாமும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்..
ஹேப்பி பர்த்டே மம்முகா!