ஓணம் வந்தல்லோ… கொண்டாட்டத்தில் பிரபலங்கள் – வைரலாகும் போட்டோஸ்!
Onam Celebration: இன்று உலகம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஓணம் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் போதும் அவர்களின் வீட்டில் பூக்களால் கோலம் போட்டு விதவிதமான உணவுகளை சமைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருடனும் இணைந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் தங்களது கொண்டாத்தை சற்றும் குறைவு இல்லாமல் கொண்டாடி வருகின்றனர். இந்திய சினிமாவைப் பொருத்தவரை எந்த ஒரு பண்டிகை வந்தாலும் பிரபலங்கள் அந்தப் பண்டிகைக் காலத்தில் புத்தாடைகளை உடுத்தி தங்களது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு பண்டிகைக்கு தங்களது வாழ்த்துகளை கூறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஓணம் பண்டிகைக்கும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சையமான சில மலையாள நடிகர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை பின்வரும் தொகுப்பில் நாம் பார்க்கலாம். அப்படி தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சையமான நடிகர் பிரித்விராஜ். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் நேரடித் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தற்போது லோகா படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார். இவர் முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
நடிகர் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகர் டொவினோ தாமஸ். இவர் மலயாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். தொடர்ந்து இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியாகும் படங்கள் தமிழ் ரசிகர்களிடையேயும் வரவேற்பைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவு:
View this post on Instagram
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. தமிழில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக சூரரைப் போற்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பட்டா போட்டார் நடிகை அபர்ணா பாலமுரளி. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் படத்திலும் தனது சிறபான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை அபர்ணா பாலமுரளி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram