ஏதும் விசேஷம் இருக்கா? புதுமண தம்பதிகள் எதிர்கொள்ளும் பெரிய சிக்கலை தெளிவாக பேசிய அன்போடு கண்மணி படம்
புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் அதிகம் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி ஏதும் விசேஷம் இருக்கா? என்ற கேள்வி. இந்த ஒரு கேள்வி அவர்களை எந்த அளவிற்கு மன அளத்தத்திற்கு கொண்டு செல்லும் என்பதை மையமாக வைத்து மலையாள சினிமாவில் வெளியான படம் தான் அன்போடு கண்மணி.

இந்திய சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியதும் அது ஆணோ அல்லது பெண்ணோ அதிகம் எதிர்கொள்ளும் கேள்வி எப்போ கல்யாண சாப்பாடு போடப்போற என்பதுதான். அப்படியே கல்யாணம் ஆனாலும் ஏதும் விசேஷம் இருக்கா? என்று அடுத்தக் கேள்வியை கேட்கத் தொடங்குவார்கள். அப்படி இந்த சமூகத்தில் தனி மனித வாழ்க்கை என்பதே இல்லாத அளவிற்கு இந்த சமூகத்தில் பலர் பாதிக்கப்படுவதை மையமாக வைத்து மலையாள சினிமாவில் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தான் அன்போடு கண்மணி. இயக்குநர் லிஜு தமஸ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் அசோகன் நாயகனாக நடித்து இருந்தார். இவர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான ப்ரோ கோட் என்ற படத்தின் ப்ரோமோவில் நடிகர்கள் ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவுடன் இருப்பதை அனைவரும் பார்த்து இருப்போம்.
இந்த நிலையில் அன்போடு கண்மணி படத்தில் நடிகர் அர்ஜுன் அசோகன் உடன் இணைந்து நடிகர்கள் அனகா நாராயணன், நவாஸ் வல்லிக்குன்னு, அல்தாப் சலீம், ஜானி ஆண்டனி, மாலா பார்வதி, மிருதுல் நாயர், பகத் மானுவல் என பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை கிரியேட்டிவ் ஃபிஷ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் விபின் பவித்ரன் தயாரித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அன்போடு கண்மணி படத்தின் கதை என்ன?
அர்ஜுன் அசோகன் மற்றும் அனகா நாராயணன் இருவருக்கும் படத்தின் தொடக்கத்தில் திருமணம் நடைபெறுகிறது. புதிதாக தங்களின் வாழ்க்கையை தொடங்கும் இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கை தொடங்குகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் இவர்களின் திருமணம் முடிந்த இரண்டாவது மாதத்தில் இருந்து ஊரில் உள்ள அனைவரும் இவர்களைப் பார்த்து கேட்கும் கேள்வி ஏதும் விசேஷம் இருக்கா? என்பதுதான்.
இந்த கேள்விகளின் அழுத்தத்தால் பாதிக்கப்டும் இவர்கள் இருவரும் மிகுந்த ஸ்ரெஸ் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே இவர்களுக்கு குழந்தை தங்குவதில் சிரமம் ஏற்படுகின்றது. ஊரில் உள்ள அனைவரும் ஏதேனும் ஒரு அட்வைஸ் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு குழந்தை பிறந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… விஜயின் பூவே உனக்காக படத்தில் இரண்டு க்ளைமேக்ஸா? நடிகை சங்கீதா சொன்ன விசயம்!
அன்போடு கண்மணி படத்தின் ட்ரெய்லர் இதோ:
Also Read… டிசம்பரில் வெளியாகிறது கார்த்தியின் வா வாத்தியார்… படக்குழு கொடுத்த அப்டேட்