கமல், ரஜினி, விஜய்கிட்ட இருந்து கத்துகிட்டது என்ன? லோகேஷ் கனகராஜ் சொன்ன விசயம்
Director Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இவரது இயக்கத்தில் நடித்த கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் கமல் ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் குறித்து பேசியது தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கைதி படம் தமிழ் ரசிகரக்ள் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்சின் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களின் படங்களை இயக்கத் தொடங்கினார். அதன்படி கைதி படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாஸ்டர்.
2021-ம் ஆண்டு வெளியான இந்த மஸ்டர் படத்தில் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தீவிர கமல் ஹாசன் ரசிகர் என்பதால் இந்தப் படத்தில் கமல்ஹாசன் குறித்த ரெஃபரன்ஸ் காட்சிகளை வைத்து இருப்பார். கமல் ஹாசனின் தீவிர ரசிகர் அடுத்து அவரை வைத்தே படத்தை இயக்கினார். அதன்படி 2022-ம் ஆண்டு வெளியான படம் தான் விக்ரம். இந்தப் படம் கமல் ஹாசனின் சினிமா வாழ்க்கையில் ஒரு கம்பேக்காக அந்த நேரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது LCU- வின் இரண்டாவது பாகம் ஆகும். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான லியோ படம் LCU-வின் 3-வது பாகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் LCU-வில் இடம்பெறாமல் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




அந்த மூன்று பேரிடமும் கற்றுக்கொண்ட விசயம் இதுதான்:
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்தப் பேட்டி ஒன்றில் கூறியதாவது, நடிகர் கமல் ஹாசனிடம் இருந்து தான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன். நான் சினிமாவிற்கு வர காரணம் அவர்தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் நட்டிகர் ரஜினிகாந்திடம் இருந்து அமைதியாக இருப்பதை கற்றுக்கொண்டேன் என்றும் விஜய் என்னுடைய அண்ணன் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூரி? வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறும் லோகேஷ் கனகராஜின் பேச்சு:
#LokeshKanagaraj about his stars🌟#KamalHaasan ~ He is my idol & I’m his devotee. It’s because of him i came to cinema🎥 #Rajinikanth ~ If you see me calm & composed, it’s because of him🧘♂️#Vijay ~ He is Anna🫶♥️ pic.twitter.com/NSuiHvNhN1
— AmuthaBharathi (@CinemaWithAB) September 1, 2025
Also Read… Bison : கபடி வீரனாக துருவ் விக்ரம்.. பைசன் படத்திலிருந்து வெளியானது ‘தீக்கொழுத்தி’ பாடல்!