Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாக்ஸ் ஆபிஸில் கோடி கோடியா வசூலிப்பது படத்தின் வெற்றி இல்லை – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு வெக்கேஷனுக்கு சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாக்ஸ் ஆபிஸில் கோடி கோடியா வசூலிப்பது படத்தின் வெற்றி இல்லை – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Sep 2025 19:23 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பெரும்பாழும் நாயகன் மற்றும் நாயகியை அடிப்படையாக கொண்டு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள். ஆனால் ஒரு சில இயக்குநர்களுக்கு மட்டுமே அவர்களின் படம் என்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள். அந்த வரிசையில் உள்ள இயக்குநர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது வலக்கமாக உள்ளது. இந்த நிலையில் இறுதியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் கூலி. ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்தார்.

மேலும் இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், காளி வெங்கட், கண்ணா ரவி, ரச்சிதா ராம், சார்லி, மோனிஷா ப்ளெசி, லொள்ளு சபா மாறன், கார்த்திகேய தேவ், திலீபன் மற்றும் ரிஷிகாந்த் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படத்தினை தயாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்தனர். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

படத்தின் வெற்றியை முடிவு செய்வது பாஸ் ஆபிஸ் இல்லை:

இந்த நிலையில் கூலி படம் வெளியாவதற்கு முன்பே பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் வெளியான முதல் நாள் மட்டுமே இங்கு இருப்பேன் அடுத்த நாளே நண்பர்கள் குடும்பத்தினருடன் வெக்கேஷன் சென்றுவிடுவேன் என்று அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் படம் வெளியான அடுத்த நாளே வெக்கேஷனுக்கு சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெக்கேஷனை முடித்துவிட்டு மீண்டும் சென்னை வந்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது தர்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஒரு படத்தின் வெற்றி என்பது பாக்ஸ் ஆபிஸில் கோடி கோடியாக வசூலிப்பது படத்தின் வெற்றி அல்ல ஒரு படத்தை இயக்கி வெளியிடுவதே படத்தின் வெற்றி என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… ‘நீங்க நல்லவர்தான்’ – வார்த்தையை விட்ட தொகுப்பாளர்.. கடுப்பாகி பதிலளித்த நடிகர் யோகிபாபு

கவனம் பெறும் லோகேஷ் கனகராஜின் பேச்சு:

Also Read… பைசன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!