Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

S.N. Sakthivel: ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் இயக்குநர் எஸ்.என். சக்திவேல் காலமானார்!

S.N. Sakthivel Passes Away : தமிழ் சினிமாவில் சீரியல் இயக்குநராகவும், திரைப்பட இயக்குநராகவும் இருந்து வந்தவர் எஸ். என். சக்திவேல். இவர் உடல்நல குறைவினால் இன்று 2025, ஆகஸ்ட் 30ம் தேதியில் காலமானார். இவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

S.N. Sakthivel: ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் இயக்குநர் எஸ்.என். சக்திவேல் காலமானார்!
இயக்குநர் எஸ்.என். சக்திவேல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Aug 2025 13:08 PM

தமிழில் “சின்ன பாப்பா பெரிய பாப்பா” என்ற சீரியலை இயக்கி மக்களிடையே பிரபலமானவர் இயக்குநர் எஸ். என். சக்திவேல். இவர்  தமிழ் சினிமாவில் “இவனுக்கு தண்ணில கண்டம்” என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படமானது கடந்த 2015ம் ஆண்டு வெளியாகியிருந்தது. மேலும் மாறுபட்ட கதைக்களத்துடனும், வித்தியாசமான நோக்கத்துடனும் சீரியல்களை இயக்கிவந்தவர் இயக்குநர் எஸ். என். சக்திவேல். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான சீரியல் பட்ஜெட் குடும்பம். இந்த சீரியலானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இவ்வாறு மிகவும் பிரபலமான இயக்குநர் எஸ். என். சக்திவேல், இன்று 2025 ஆகஸ்ட் 30ம் தேதியில் உடல்நல குறைவினால் காலமானார். இவரின் மறைவிற்கு ஒட்டுமொத்த சின்னதிரை உலகம், சினிமா துறையினர் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரின் மறைவானது மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : அந்த மாதிரி கதை வந்தா தமிழ் படத்தில் நாயகனாக நடிப்பேன் – நடிகர் டொவினோ தாமஸ்!

எஸ்.என். சக்திவேல் இரங்கல் குறித்த பதிவு :

தமிழில் தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் கடந்த 2000ம் ஆண்டு தொடக்கம் முதல் ஒளிபரப்பப்பட்டு வந்த நகைச்சுவை சீரியல் சின்ன பாப்பா பெரிய பாப்பா. இந்த சீரியலானது நகைச்சுவை, அசத்தல் நடிப்பு மற்றும் மாறுபட்ட கதைக்களத்தில் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்த சீரியலில் நடிகர்கள் நளினி, ஸ்ரீபிரியா, ரேணுகா, வி.ஜே. சித்ரா, கல்பனா, சீமா, தேவதர்ஷினி மற்றும் மதுமிதா என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த சீரியலானது கிட்டத்தட்ட 4 பருவங்களாக வெளியாகியிருந்தது. இந்த சீரியல் அப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபல வரவேற்பை பெற்ற தொடராக அமைந்திருந்தது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : நடிகை சாய் தன்ஷிகாவை விட நடிகர் விஷால் இத்தனை வயது மூத்தவரா?

இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படம் :

கடந்த 2015ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் இவனுக்கு தண்ணில கண்டம். இந்த படத்தை இயக்குநர் எஸ். என். சக்திவேல் இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலம்தான் இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் முன்னணி வேடத்தில் நடிகர் தீபக் , மொட்டை ராஜேந்திரன், நேஹா ரத்னகாரன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது ஓரளவுதான் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தை அடுத்ததாக மேலும் சில படங்களில் உதவி இயக்குநராகவும் எஸ். என். சக்திவேல் பணியாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இன்று 2025, ஆகஸ்ட் 30 தேதியில் இயக்குநர் எஸ்.என். சக்திவேல் காலமானார். இந்த தகவலானது தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.