Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகை சாய் தன்ஷிகாவை விட நடிகர் விஷால் இத்தனை வயது மூத்தவரா? 

Vishal - Sai Dhanshika: நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் இடையே உள்ள வித்யாசத்தை தற்போது பார்க்கலாம்.

நடிகை சாய் தன்ஷிகாவை விட நடிகர் விஷால் இத்தனை வயது மூத்தவரா? 
நடிகர் விஷால் - நடிகை சாய் தன்ஷிகாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Aug 2025 21:58 PM

தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனாவர் நடிகை சாய் தன்ஷிகா (Actress Sai Dhanshika). தொடர்ந்து சினிமாவில் இரண்டாம் நாயகியாகவே பலப் படங்களில் நடித்துள்ளார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சாய் தன்ஷிகா 2009-ம் ஆண்டு நடிகர் ரவி மோகனின் நடிப்பில் வெளியான பேரான்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடிகை சாய் தன்ஷிகாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இரண்டாம் நாயகியாக நடித்து இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு வெளியான மாஞ்சா வேலு படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து நாயகி மற்றும் இரண்டாம் நாயகி என அனைத்து கதாப்பாத்திரங்களையும் தொடர்ந்து கலந்துகட்டி நடித்து வருகிறார் நடிகை சாய் தன்ஷிகா. தொடர்ந்து அரவான், பரதேசி, கபாலி என பெரிய நடிகர்களின் படங்களிலும் நடித்தார். இதில் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ராதிகா ஆப்தேவின் மகளாக மாஸ் ஆக்டிங்கை கொடுத்து இருந்தார். இந்தப் படத்தில் இவரின் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதனைத் தொடர்ந்து பலப் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிகை சாய் தன்ஷிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

காதலுக்கு கண்கள் மட்டும் இல்லை வயதும் தெரியாது:

பொதுவாக இந்த சமூகத்தில் ஒரு கருத்து உள்ளது. அது என்ன என்றால் காதலுக்கு கண்கள் இல்லை என்பதுதான். அதனை ஏன் கூறுவார்கள் என்றால் காதலிப்பதற்கு அழகு, பணம் இப்படி எதுவும் தேவையில்லை என்பதை கூறுவதற்காகத்தான். அப்படி இன்று திருமண நிச்சயம் முடிந்த நடிகர்கள் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்யாசம் குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி நடிகர் விஷால் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி 1977-ம் ஆண்டு பிறந்தார். அதே போல நடிகை சாய் தன்ஷிகா நவம்பர் மாதம் 20-ம் தேதி 1989-ம் ஆண்டு  பிறந்தார். விஷாலுக்கு இன்றுடன் 48 வயது ஆன நிலையில் நடிகை சாய் தன்ஷிகாவிற்கு தற்போது 35 வயது அதன்படி இவர்கள் இருவருக்கும் 13 வயது வித்யாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் தலைப்பு தெரியுமா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

நடிகை சாய் தன்ஷிகாவில் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vishal (@actorvishalofficial)

Also Read… மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த இரண்டாவது மனைவி –  என்ன நடந்தது?