Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த இரண்டாவது மனைவி –  என்ன நடந்தது?

Joy Crizildaa Madhampatty Rangaraj: நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவரது இரண்டாவது மனைவி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது தற்போது சமுக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகின்றது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த இரண்டாவது மனைவி –  என்ன நடந்தது?
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 29 Aug 2025 15:24 PM IST

நடிகரும் பிரல சமயல் கலைஞருமாக மக்கள் மத்தியில் நன்கு அறிமுகம் ஆனவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தொடர்ந்து பல பெரிய பெரிய பிரபலங்களின் வீட்டு விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் சமையல் செய்து வருகிறார். இவரது வீடியோக்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் பதிவிடும் பதிவிற்கு ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் சமையல் கலைஞராக மட்டும் இன்றி நடிகராகவும் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்கஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் மாதம்பட்டி ரங்கராஜ்.

இந்தப் படத்தில் இவரது நட்டிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். இதில் வரும் கண்ண மூடி கண்ட கனவே பாடல் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களுக்கு பிடித்தப் பாடலாக உள்ளது. தொடர்ந்து நடிகை கீர்த்து சுரேஷிற்கு ஜோடியாக பென்குயின் படத்திலும் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சர்சைகளில் சிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்:

பிசியான சமையல் கலைஞராக வலம் வரும் மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்த இரண்டாவது திருமணம் குறித்து அவர் எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜிற்கும் முன்னதாகவே திருமணம் நடைப்பெற்றதாகவும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்து இருந்தார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்ய முடியும் என்று பல விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில் சமீபத்தில் முதல் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொண்டது இணையத்தில் வைரலானது.

அந்த வீடியோ வைரலாகும் போதே ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் உடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கலை பதிவிட்டார். இப்படி மாறிமாறி தனது உறவை உறுதிப்படுத்த ஜாய் கிரிசில்டா பல செயல்களின் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் இதில் எதிலும் தலையிடாமலே மாதம்பட்டி ரங்கராஜ் இருந்துவந்தார்.

Also Read… எனக்கு ரௌடி ஆகனும்னு ஆசை இல்ல நான் படிக்கனும்… சுள்ளான் சேது டீசர் இதோ!

பேட்டியில் ஜாய் கிரிசில்டா சொன்னது என்ன?

இந்த நிலையில் இன்று மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது கணவர் தன்னுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டதாகவும் அவரை தொடர்பு கொள்ள நினைத்த போது தன்னை தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த ஜாய் கிரிசில்டா அந்த குழந்தைக்கும் தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக இந்த புகாரை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் மாதம்பட்டி ரங்கராஜை நெருங்க முடியாத அளவிற்கு சிலர் சதி செய்வதாக அவர் கூறிய நிலையில் அது யாராக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அது மாதம்பட்டி ரங்கராஜின் நண்பர்கள் மற்றும் தம்பி என்று ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகின்றது.

ஜாய் கிரிசில்டா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது விஷாலின் மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!