Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எனக்கு ரௌடி ஆகனும்னு ஆசை இல்ல நான் படிக்கனும்… சுள்ளான் சேது டீசர் இதோ!

Sullan Sethu Movie Official Teaser | கிராமத்து கதையை மையமாக வைத்து பல ஆக்‌ஷன் படங்களை இயக்கியவர் இயக்குநர் முத்தையா. இந்த நிலையில் இவரது மகன் நாயகனாக அறிமுகம் ஆகும் சுல்லான் சேது படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தற்போது வெளியிட்டுள்ளார்.

எனக்கு ரௌடி ஆகனும்னு ஆசை இல்ல நான் படிக்கனும்… சுள்ளான் சேது டீசர் இதோ!
சுள்ளான் சேதுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Aug 2025 13:58 PM

கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஆக்‌ஷன் படங்களை இயக்குவதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலம் ஆனவர் இயக்குநர் முத்தையா (Director Muthaiya). கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்த குட்டிப் புலி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் முத்தையா. ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து கொம்பன் என்ற படத்தை இயக்கினார். ஊருக்குள் சண்டியராக இருக்கும் நடிகர் கார்த்தி திருமணத்திற்கு பிறகு எப்படி இருக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் வெளியான மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, விருமண், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் என அனைத்துப் படங்களும் கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன் படமாகவே வெளியானது. இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான பிறகு அதனைத் தொடர்ந்து அடுத்து எந்தப் படம் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிகராக அறிமுகம் ஆகும் முத்தையாவின் மகன்:

இந்த நிலையில் இயக்குநர் முத்தையா தற்போது சுள்ளான் சேது படம் தற்போது உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இயக்குநர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா நாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருடன் இணைந்து நடிகர்கள் பரத், சமுத்திரக்கனி, பிரிஜிதா சகா, தர்ஷினி செம்மலர், போஸ் வெங்கட், பவன், மைனா நந்தினி, ஏ.வெங்கடேஷ், அறந்தாங்கி நிஷா, அன்னை பாரதி, விஜய் முத்து, விமல்ராஜா, எம். சுகுமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை தயரிப்பு நிறுவனமான கே.கே.ஆர் சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர் ரமேஷ் பாண்டியன் தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று இந்தப் படத்தின் டீசரை நடிகர் கார்த்தி அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read… மதராஸி படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் தான் – பிஜு மேனன்

நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… இந்த போட்டோஸ் எல்லாம் 7 வருஷத்துக்கு முன்னாடி எடுத்ததா? இணையத்தில் கவனம் பெரும் ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா போஸ்ட்!