நார்த் அமெரிக்காவில் வசூலில் புதிய வரலாறு படைத்த கூலி படம்!
Coolie Movie Collection: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் வசூலில் மாஸ் காட்டி வருகின்றது. அந்த வகையில் நார்த் அமெரிக்காவில் வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கூலி படத்தின் 4 நாட்கள் வசூலை படக்குழு வெளியிட்டு இருந்தது முன்னதாக. அதில் 4 நாட்கலிலேயே ரூபாய் 404 கோடிகள் உலக அளவில் வசூலித்ததாக படக்குழு அறிவித்து இருந்தது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை அளித்தது. படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வங்கியும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் படக்குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த மனுவிற்கு தணிக்கை குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை தற்போது நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து சிங்கப்பூரில் 4 நிமிடக் காட்சிகள் குறைத்து பெற்றோர்களின் அனுமதியுடன் படத்தை அனைவரும் பார்க்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்ற நாடுகளில் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்து இருந்தாலும் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் உள்ளது. அதனைப் படக்குழு வெளியிடும் பதிவுகளிலேயே காண முடிகின்றது.
நார்த் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த முதல் தமிழ் படம் கூலி:
கூலி படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் செய்துள்ளது. இது சர்வதேச அளவில் இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகர் விஜயின் படத்தை உலக அளவில் இந்த நிறுவனம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த நிறுவனம் கூலி படத்தை இதுவரை இல்லாத அளவிற்கு கூலி படத்தை உலக அளவில் அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் நார்த் அமெரிக்காவில் கூலி படம் புதிய சாதனை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை எந்த தமிழ் படமும் வசூலிக்காத அளவு அதிக அளவில் கூலி படம் வசூலித்துள்ளது. அதன்படி 6.719 டாலர்கள் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Also Read… உலக அளவில் 100 கோடி வசூலித்த தலைவன் தலைவி படம் – உற்சாகத்தில் படக்குழு
ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Thalaivar erangi saritham eluthavey 🔥
The Throne is his…🔥 #SuperstarRajinikanth 👑 #Coolie is now the ALL TIME HIGHEST TAMIL GROSSER in NORTH AMERICA 🤩🥳Overseas release by @Hamsinient 🗺️ @sunpictures @Dir_Lokesh @anirudhofficial @PrathyangiraUS #AamirKhan #Nagarjuna… pic.twitter.com/LeIiwdMgDX
— Hamsini Entertainment (@Hamsinient) August 24, 2025
Also Read… இட்லி கடை படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு