இட்லி கடை படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
Idly Kadai Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்றப் படம் குபேரா. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படத்தை நடிகர் தனுஷே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் டான் பிக்சர்ஸ் மற்றும் ஒண்டர் பார் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தில் பல கேள்விகளை எழுப்பியது. அதன்படி ஒரு போஸ்டரில் நடிகர் தனுஷ் வயது அதிகமானவராகவும் கிராமத்து நபராக இருப்பார்.
அதே போல அடுத்தப் போஸ்டரில் நடிகர் தனுஷ் இளமையான தோற்றத்தில் நடிகர் தனுஷ் இருப்பது ரசிகர்களிடையே இரண்டு கதாப்பாத்திரத்தில் அவர் நடித்து இருப்பார் என்று யூகித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ஆர்.பார்த்திபன், சமுத்திரக்கனி ராஜ்கிரண், இளவரசு, வடிவுக்கரசி, இந்துமதி மணிகண்டன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் முன்னதாக ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்த நிலையில் பின்பு ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.




இட்லி கடை படத்திலிருந்து வெளியாகும் எஞ்சாமி தந்தானே பாடல்:
இந்த நிலையில் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக என்ன சுகம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அந்த வகையில் இன்று படக்குழு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எஞ்சாமி தந்தானே என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாக உள்ளதாக படக்குழு தங்களது எகஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… மார்ஷல் படத்தில் கார்த்திக்கு வில்லனான ஆதி… வைரலாகும் தகவல்!
இட்லி கடை படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Celebrate this Vinayagar Chathurthi with Enjaami Thandhaane from #IdliKadai 🧨🔥@dhanushkraja x @gvprakash combo is back with yet another musical treat 🕺🥁
Feasting in cinemas worldwide from October 1st@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya… pic.twitter.com/OD75HAw9NQ
— DawnPictures (@DawnPicturesOff) August 24, 2025
Also Read… சூரியாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!