Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூலி பிடிஎஸ் புகைப்படங்களுடன் நடிகர் சௌபின் சொன்ன விசயம் – வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்

Actor Soubin Shahir: மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சௌபின் ஷாகிர் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள கூலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கூலி பிடிஎஸ் புகைப்படங்களுடன் நடிகர் சௌபின் சொன்ன விசயம் – வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
கூலி படக்குழுவினர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2025 12:55 PM IST

மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சௌபின் ஷாகிர் (Actor Soubin Shahir). இவர் மலையாள சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முகத்தன்மையோடு விளங்குகிறார். இந்த நிலையில் இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலமாகதான். 2024-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்கி இருந்தார். 2006-ம் ஆண்டு கேரளாவில் மஞ்சும்மல் என்ற பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுழா சென்ற இளைஞர்கள் குணா குகைக்கு செல்கின்றனர். அங்கு சுற்றுழா பயணிகளுக்கு தடைச்செய்யப்பட்ட பகுதிக்கு சென்ற இந்த இளைஞர்களில் ஒருவர் டெவில்ஸ் கிட்சென் என்று அழைக்கப்படும் ஒரு படுகுழிக்குள் விழுகிறார். அவரை அவரது நண்பர்கள் அனைவரும் எப்படி காப்பாற்றினர் என்ற் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மஞ்சுமல் பாய்ஸ் படம் வெளியாகி இருந்தது.

இந்தப் படத்தில் நடிகர் சௌபின் ஷாகிர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த காதாப்பாத்திரத்தால் இவர் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் தற்போது கூலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு நேர் எதிரான கதாப்பாத்திரத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார்.

உங்கள் அன்புக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் அனைவருக்கும் நன்றி:

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சௌபின் ஷாகிரின் கதாப்பாத்திரத்தைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சௌபின் ஷாகிர் அந்தப் பதிவில் உங்கள் அன்புக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் அனைவருக்கும் நன்றி. தயால் எப்போதும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பார். கூலி எப்போதும் என் இதயத்திற்கு மிக நெருக்கமாக இருப்பார். உங்கள் அனைவருக்கும் என் மிகுந்த காதலை கொடுக்கிறேன் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் சௌபின் ஷாகிர் வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் சௌபின் ஷாகிர், உபேந்திரா, ரஜினிகாந்த், அமீர் கான் அனைவரும் உள்ளனர்.

Also Read… கூலி படத்தில் மாஸ் காட்டிய உபேந்திராவின் மனைவி அஜித் பட நடிகைதானாம்… யார் தெரியுமா?

சௌபின் ஷாகிர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Soubin Shahir (@soubinshahir)

Also Read… அந்த வயசுக்கு இந்த உலகத்துல எதைப் பத்தியும் கவலை இல்லை… வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டாகிராம் பதிவு!