கூலி படத்தில் மாஸ் காட்டிய உபேந்திராவின் மனைவி அஜித் பட நடிகைதானாம்… யார் தெரியுமா?
Actor Upendra Rao: கூலி படத்தில் கலீஷா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார் உபேந்திரா ராவ். இவரது மனைவி நடிகர் அஜித் குமாரின் படத்தில் நாயகியாக நடித்தவர் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

கடந்த 1989-ம் ஆண்டு முதல் கன்னட சினிமாவில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மையோடு வலம் வருபவர் உபேந்திரா ராவ் (Actor Upendra Rao). இவரது நடிப்பில் வெளியான படங்களும் இயக்கத்தில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் கன்னட சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் பலப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான சத்யம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் 2008-ம் ஆண்டு சத்யம் படத்தில் நடித்த உபேந்திரா சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் உபேந்திரா கூலி படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே அவரி காட்சிகள் படத்தில் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் படம் வெளியான பிறகு உபேந்திராவின் காட்சிகள் கூலி படத்தில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.




உபேந்திராவின் மனைவி அஜித்தின் ராஜா பட நடிகை பிரியங்கா திரிவேதி:
இந்தநிலையில் நடிகர் உபேந்திராவின் மனைவி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் உபேந்திராவின் மனைவி பெயர் பிரியங்கா திரிவேதி. இவர் நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் வெளியான ராஜா படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் அஜித் கல்லூரியில் படிக்கும்போது காதலிக்கும் ஹவுஸ் ஓனரின் மகளாக நடிகை பிரியங்கா திரிவேதி நடித்து இருப்பார்.
மேலும் இந்தப் படத்திலும் இவரது பெயர் பிரியா தான். இந்தப் படத்திற்கு பிறகு இவர் தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இவர் கன்னட சினிமாவில் பலப் படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து உபேந்திராவை கடந்த 2003-ம் ஆண்டு இவர் திருமணம் செய்துக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா திரிவேதியின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram