Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கணவர் இல்லாத வெறுமை.. கோட்டா சீனிவாசராவ் மனைவியும் மறைவு.. ஒரே மாதத்தில் சோகம்

Kota Srinivarasa Rao's wife Passed Away : தமிழ் சினிமாவில் பலப் படங்களில் வில்லனாக கலக்கிய நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் கடந்த ஜூலை மாதம் உடல் நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில் அவர் மறைந்த ஒரு மாதத்திலேயே அவரது மனைவி ருக்மணி இன்று காலமான செய்து குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கணவர் இல்லாத வெறுமை.. கோட்டா சீனிவாசராவ் மனைவியும் மறைவு.. ஒரே மாதத்தில் சோகம்
மனைவியுடன் கோட்டா சீனிவாசராவ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Aug 2025 18:17 PM

தெலுங்கு சினிமாவின் பழம் பெறும் நடிகர் கோட்டா சீனிவாசராவ் (Kota Srinivasa Rao) கடந்த 1978-ம் ஆண்டு முதல் பல நூறுப் படங்களில் நடித்துள்ளார். வில்லன், காமெடியன் குணச்சித்திர நடிகர் என பல கதாப்பாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக கோட்டா சீனிவாச ராவ் கலக்கி இருப்பார். இவர் தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி சினிமாவில் பலப் படங்களில் நடித்து அசத்தி உள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான சாமி, குத்து, ஏய், திருப்பாச்சி பரமசிவன், கொக்கி, சத்யம், தனம், பெருமாள், லாடம், அம்பாசமுத்திர அம்பானி, பவானி, கோ, மம்பட்டியான், சகுனி, தாண்டவம், ஆலினால் அழகுராஜா என பலப் படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இவர் இறுதியாக நடித்தப் படம் 2018-ம் ஆண்டு வெளியான காத்தாடி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்த இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆலினால் அழகுராஜா படத்தில் ஒரு காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரை கோட்டா சீனிவாச ராவ் என்று தமிழ் சினிமா ரசிகர்களிடையே சொன்னால் தெரிவதை விட சாமி படத்தின் வில்லன் என்று சொன்னால்தான் தெரியும். அப்படி அந்தப் படத்தில் இவர் வில்லனாக மிரட்டி இருப்பார். மேலும் இந்த சாமி படம் தான் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகம் ஆனப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… தல என்று அழைக்காதீர்கள் என சொன்ன அஜித் – ஏ.ஆர்.முருகதாஸின் ரியாக்‌ஷன் என்ன?

கோட்டா சீனிவாச ராவின் மனைவி காலமானார்:

அதன்படி தொடர்ந்து தனது நடிப்பால் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி அவரது 83-வது வயதில் வயது மூப்பு காரணமாகவும் உடல் நலக் குறைவு காரணமாகவும் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலர் நேரில் சென்று தங்களது இரங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோட்டா சீனிவாச ராவ் உயிரிழந்து ஒரு மாதமே ஆன நிலையில் அவரது மனைவி ருக்மணி இன்று 18-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு காலமானார். இந்த செய்தி அவரது குடும்பத்தினரை மட்டும் இன்றி திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு உறவினர்கள், நண்பர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… துப்பாக்கி தான் இரண்டாம் பாகம் எடுக்க சரியா இருக்கும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்