Yogi Babu : தமிழைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் யோகி பாபு!
Yogi Babu Telugu Debut : தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் யோகி பாபு. இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியான தகவலின்படி, இவர் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார். தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் யோகி பாபு (Yogi Babu) தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து தனது திறமையால் தமிழின் முன்னணி காமெடியனாக உயர்ந்தார். தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பல்வேறு ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா (Kolamavu kokila) அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது . கடந்த 2018ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இப்படத்தில் நயன்தாரா முன்னணி வேடத்தில் நடிக்க, அவருடன் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்திருந்தார்.
இந்த படத்தை அடுத்தடுத்து படங்களில் காமெடியனாக மட்டுமல்லாமல் கதையின் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் பிரபலமான இவர், தற்போது தெலுங்கு சினிமாவிலும் படங்களில் அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் முரளி மனோஹர் ரெட்டி இயக்கத்தில், “குர்ரம் பாப்பி ரெட்டி” (Gurram Poppi Reddy) என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க : ஆமிர் கான் நடிக்கும் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் – லோகேஷ் கனகராஜ் பேச்சு!
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் யோகி பாபு :
நடிகர் யோகி பாபு, தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இவர் இயக்குநர் முரளி மனோஹர் ரெட்டி இயக்கும், புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் பிரம்மானந்தம் முக்கிய நாயகனாக நடிக்கும் நிலையில், நடிகர் யோகி பாபுவும் அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படமானது “குர்ரம் பாப்பி ரெட்டி” என்று அழைக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான், நடிகர் யோகி பாபு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இது தற்போது அவரின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படத்துடன் மோதும் அனுஷ்காவின் ‘காதி’ – வசூலில் வெல்லப்போவது யார்?
இணையத்தில் வைரலாகும் பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவின் புகைப்படம்
Actor @iYogiBabu makes his grand Telugu debut!
Teaming up with comedy legend #Brahmanandam in #Gurrampaapireddy – a laugh riot is loading! 🎬🔥#YogiBabu pic.twitter.com/bZP9egvZ1K— Ramesh Bala (@rameshlaus) August 7, 2025
யோகி பாபுவை நேரில் அழைத்து பாராட்டிய பிரம்மானந்தம்
யோகி பாபு தெலுங்கு அறிமுகமாகும் நிலையில், நடிகர் பிரம்மானந்தம் யோகி பாபுவை பாராட்டியுள்ளார். நடிகர் யோகி பாபுவை தனது வீட்டிற்கு அழைத்து, நீண்டநேரம் பேசியுள்ளார். மேலும் அவருக்கு, நடிகர் பிரம்மானந்தம் எழுதிய, “நான் பிரம்மானந்தம்” என்ற புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்துள்ளார். தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.