Lokesh Kanagaraj : ஆமிர் கான் நடிக்கும் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் – லோகேஷ் கனகராஜ் பேச்சு!
Lokesh Kanagaraj And Aamir Khan Movie :தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் பாலிவுட் நடிகர் ஆமிர் கானை வைத்தும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதையைப் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் கூலி (Coolie). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரிக்க, அனிருத் (Anirudh) இசையமைத்திருக்கிறார். இந்த கூலி திரைப்படமானது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்தப் படமானது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் 6வது படமாக உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.
நேர்காணலில் பேசிய அவர், ஆமிர் கானுடன் (Aamir Khan) இணையும் திரைப்படத்தைக் குறித்தும், அதன் கதைக்களம் குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர், ஆமிர்கானுடன் இணையும் படம் இரும்புக் கை மாயாவி (Irumbu kai mayavi) படம் என அனைவரும் நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அது இல்லை என அவர் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.




இதையும் படிங்க : ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?
ஆமிர்கானுடன் இணையும் திரைப்படம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்
அந்த நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் ஆமிர்கானுடன் இணையும் படத்தைப் பற்றியும் பேசியிருந்தார். லோகேஷ் கனகராஜ், ” இரும்பு கை மாயாவி படத்தின் கதையை நான் 10 வருடங்களுக்கு முன்னே எழுதிவிட்டேன். இப்போது அந்த கதையைப் பண்ணமுடியாது. காரணம் அந்த கதையிலிருந்த காட்சிகளை நான் இயக்கியிருந்த படங்களில் பயன்படுத்திவிட்டேன். அந்த படத்தின் கதையை நான் சரி செய்ய வேண்டும் என்றால், அது மீண்டும் ஒரு புது கதையாகத்தான் உருவாகும். மேலும் ஆமிர்கான் சாரை எனக்கு சிறு வயதிலிருந்தே பிடிக்கும், அவரின் நடிப்பும் நன்றாக இருக்கும்.
இதையும் படிங்க : அந்த மாதிரி பாடலுக்கு டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்கும் – நடிகை பூஜா ஹெக்டே!
ஆமிர் கானுடன் இணையும் படம் பற்றி லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ :
Q: Are you doing #IrumbuKaiMayavi with Aamirkhan❓pic.twitter.com/f6iYyhAW9B#LokeshKanagaraj: IrumbuKaiMayavi was written 10 Years back✍️. Some Mythological film had came, resembling some scenes from IKM🤝. So I have to change the entire script. #AamirKhan sir asked action film…
— AmuthaBharathi (@CinemaWithAB) August 7, 2025
கூலி திரைப்படத்தில் அவர் நடித்து முடிக்கும்போதே, என்னுடன் ஒரு படம் நிச்சயமாகப் பண்ணவேண்டும் என்று அவர் கூறினார். நானும் அவருடன் ஒரு படத்தின் கதையைப் பற்றியும் கூறியிருந்தேன். அவருக்கும் அது பிடித்திருந்தது. அவர் ஆனால் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்து வருகிறார். அவர் கமிட்டான படங்களை முடித்ததும் இந்த படம் உருவாகும். அது நிச்சயமாக ஒரு பெரிய ஆக்ஷ்ன் திரைப்படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.