Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!

Bison Kaalamaadan: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தி அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பைசன் காலமாடன். இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!
பைசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Aug 2025 15:26 PM

இயக்குநர் ராம் இடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இவர் கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் மாரி செல்வராஜ். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தமிழக மக்கள் மட்டும் இன்றி தென்னிந்தா முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். இதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் இறுதியாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரமை நாயனாக வைத்து படம் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகரக்ளிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து படத்திற்கு பைசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளாதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடிகை அனுபமா பரமேசுவரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள், அருவி மதானந்த் மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பைசன் காளமாடனின் முதல் விமர்சனம் இதோ:

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் படத்தை பார்த்தது குறித்து தயாரிப்பாளர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பைசன் படத்தை பார்த்தோம். எங்களை வியப்பில் ஆழ்த்திய ஒரு அனல் பறக்கும் சக்திவாய்ந்த கலைப்படைப்பு. இப்படி ஒரு துணிச்சலும் திறமிக்க படடததை டயாரிடதததில் அப்ளாஸ் பெருமிதம் கொள்கிறது. இந்த தீபாவளிக்கு வருகிறான் பைசன் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளனர்.

Also Read… எனது படங்களில் அந்தப் படத்தை 2-வது பாகம் எடுத்தால் மகிழ்ச்சி – நடிகர் சிவகார்த்திகேயன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் படத்திற்கு கிடைத்த முதல் விமர்சனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… திருமணம் குறித்து யோசிச்சாலே பயமா இருக்கு – நடிகை ஸ்ருதி ஹாசன்!