தலைவன் தலைவி படத்திலிருந்து வெளியானது பொட்டல மிட்டாயே பாடல் வீடியோ!
Pottala Muttaye: நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்ய மேனன் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தில் இருந்து தற்போது பொட்டல மிட்டாய் என்ற பாடலில் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தலைவன் தலைவி. குடும்ப செண்டிமெண்ட் படங்களுக்கு தமிழ் சினிமாவில் பெயர்போன இயக்குநர் பாண்டிராஜ் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் இவரது இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள இந்த தலைவன் தலைவி படத்தில் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathy) நாயகனாகவும் நடிகை நித்யா மேனன் (Actress Nithya Menon) நாயகியாகவும் நடித்து இருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, தீபா, காளி வெங்கட், ரோஷ்ணி ஹரிப்பிரியன், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினி, சரவணன், செம்பன் வினோத் ஜோஸ், அருள் தாஸ், வினோத் சாகர் மற்றும் செண்ட்ராயன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் கடந்த 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்தும் திரையரங்குகளில் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.




இணையத்தில் கவனம் பெறும் பொட்டல மிட்டாயே பாடல் வீடியோ:
இந்தப் படத்தில் இருந்து படம் வெளியாவதற்கு முன்பே லிரிக்கள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக பொட்டல மிட்டாயே பாடலின் லிரிக்கள் வீடியோ ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தது. மேலும் இன்ஸ்டாகிராம் உட்பட ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் இந்தப் பாடலுக்கு ஜோடியாக நடனம் ஆடி வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தலைவன் தலைவி படத்திலிருந்து பொட்டல மிட்டாயே பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் பாடலில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Also Read… உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு… கணவர் அஜித்திற்கு வாழ்த்து கூறிய ஷாலினி!
தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Aasa kaththura sathhtam puriyaatha puriyaatha🙂↕️😁#PottalaMuttaye video song is out, watch now!💗
Isai 🎹: @Music_Santhosh
Paadiyavargal 🎤: #SanthoshNarayanan #Sublahshini
Varigal ✍🏻: @Lyricist_Vivek#ThalaivanThalaivii @VijaySethuOffl… pic.twitter.com/9Y8urpluch— Think Music (@thinkmusicindia) August 5, 2025
Also Read… தலைவன் எறங்க… சரிதம் எழுத… கூலி படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்