Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dulquer Salmaan : துல்கர் சல்மானின் 41வது படம்.. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!

DQ41 Movie Shooting Pooja : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் துல்கர் சல்மான். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் 41வது படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Dulquer Salmaan : துல்கர் சல்மானின் 41வது படம்.. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!
துல்கர் சல்மான் மற்றும் நானிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Aug 2025 15:54 PM

நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். தனது தந்தையைப் போல இவரும் சினிமாவில் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாள சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தற்போது பல்வேறு மொழிகளிலும் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar). இந்த படமானது எதிர்பார்ப்புகளைக் கடந்து, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்து காந்தா (Kaantha) மற்றும் ஐ ஆம் கேம் (I am Game) என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்ததாக மேலும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு இயக்குநர் ரவிபாபு நெலகுடிதி (Ravibabu Nelakuditi) இயக்கத்தில் புதிய படத்தில், நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இப்படமானது தற்போது, DQ 41 திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று 2025, ஆகஸ்ட் 4ம் தேதியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இப்படத்தின் பூஜையில் நடிகர் நானி (Nani) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தற்போது இப்படத்தின் பூஜையின்போது எடுக்கப்பட்ட படத்தைப் படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க : நடிகர் கவினின் கிஸ் படத்தின் ரிலீஸ் எப்போது… வைரலாகும் தகவல்!

துல்கர் சல்மானின் 41வது படத்தின் பூஜை


துல்கர் சல்மானின் DQ41 திரைப்படம் :

இந்த DQ41 திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் முன்னணி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தைத் தெலுங்கு இயக்குநர் ரவிபாபு நெலகுடிதி இயக்கவுள்ளார். இவர் மகேஷ் பாபுவின் “சர்க்கரு வாரி பாட்டா” என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மானின்  41வது படத்தின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விமல் நடிக்கும் ‘வடம்’.. டைட்டில் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரல்!

மேலும் இந்த புதிய படத்தை எஸ்.எல்.வி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படமானது மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளதாம். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மானின் புதிய திரைப்படம் :

நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் உருவாகி வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. அதில் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காந்தா. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த படமானது வரும் 2025 செப்டம்பர் 12ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.