Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya : கமல்ஹாசன்தான் எனது வழிகாட்டி.. மேடையில் எமோஷனலாக பேசிய சூர்யா!

Suriya About Kamal Haasan : கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் சூர்யா. இவரின் அகரம் அறக்கட்டளையில் 15வது வருட நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிலையில், அவரை பற்றி மேடையில் சூர்யா எமோஷனலாக பேசியுள்ளார். அது குறித்து விவாரமாக பார்க்கலாம்.

Suriya : கமல்ஹாசன்தான் எனது வழிகாட்டி.. மேடையில் எமோஷனலாக பேசிய சூர்யா!
சூர்யாவும் கமல்ஹாசனும்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Aug 2025 20:29 PM

நடிகர் சூர்யா (Suriya), தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் கருப்பு (Karuppu) மற்றும் சூர்யா46 (Suriya46) என இரு திரைப்படங்கள் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக ரெட்ரோ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படம் சுமார் ரூ 232 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இதைத் தொடர்ந்து கருப்பு மற்றும் சூர்யா 46 என இரு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா, அகரம் (Agaram Foundation) என்ற அறக்கட்டளையை வைத்துள்ளார். இந்த அறக்கட்டளையின் மூலம் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஏழை மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கும் கல்வியை வழங்கி வருகிறார். இவரின் உதவியில் பல மாணவர்கள் படித்து, பல்வேறு நிலைகளிலிருந்து வருகின்றனர். நடிகர் சூர்யா, அகரம் என்ற இந்த அறக்கட்டளையின் கீழ் பல்வேறு மாணவர்களுக்கு உதவி வருகிறார் .

இந்த அறக்கட்டளை தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று 2025, ஆகஸ்ட் 3ம் தேதியில் பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய சூர்யா, கமல்ஹாசன்தான், தனது வழிகாட்டி என மேடையில் எமோஷனலாக பேசியிருந்தார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : அஜித்துடன் ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா, அனிருத்… – வைரலாகும் போட்டோ – பின்னணி என்ன?

கமல் ஹாசன் குறித்து மேடையில் எமோஷனலாக பேசிய சூர்யா :

அந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய நடிகர் சூர்யா, ” எனக்கு தனிப்பட்ட முக்கிய வழிகாட்டி ஒருத்தர் இருக்கிறார். ஆல்காட்டி விரலுக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கிறது என்று சொல்லலாம். இது கேள்விகளை கேட்கிற விரல் என்று சொல்லலாம், குறை கூறுகிற விரல் என்று சொல்லலாம். மிரட்டுகிற விரல் என்று சொல்லலாம். ஆனால் இதே விரலைக் கீழே காண்பித்து, நான் இருக்கிறேன் விரலைப் பிடித்துக்கொள், நீ வா என்று அர்த்தம். அந்த விரலாக என்னை வழிகாட்டியது, எனது அண்ணா, சித்தப்பா, நம்மளுடைய கமல்ஹாசன் சார். இதை ஏற்கனவே சொல்லியிருக்கிறார். நான் என்னுடைய ரூமில், கமல்ஹாசன் சாரின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருக்கிறேன், நாயகன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மீசையை எடுத்துவிட்டுச் சுற்றியிருக்கிறேன்.

கமல் ஹாசன் குடித்து சூர்யா பேசிய வீடியோ :

இதையும் படிங்க : சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன் – வைரலாகும் வீடியோ!

அந்த போஸ்டரை ஒட்டிவிட்டு எனக்கும் கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு உறவு , இப்படி ஒரு பயணம் கிடைக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. ரசிகர் மன்றமாக இருந்ததை நற்பணி மன்றமாக மாற்றியது அவர்தான், அவர் காசுக்காகப் படத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை. அந்த கலைக்காகத் தன்னை எவ்வாறு உயர்த்திக்கொள்ளலாம், எவ்வாறு முன் உதாரணமாக இருக்கலாம் என்றுதான் அவர்பண்ணுகிறார். நான் அவரை அவ்வாறுதான் பார்க்கிறேன், நான் உயர்வதற்கு, நான் வளர்வதற்கு மற்றும் நான் ஒரு இலக்கை தொடுவதற்கு அவர்தான் எனக்கு எப்போதும் இன்ஸ்பிரேஷன்” என நடிகர் சூர்யா ஒபனாக பேசியிருந்தார்.