Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya : அகரம் அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழா.. மாஸ் என்ட்ரி கொடுத்த சூர்யா!

Suriyas 15 Years Of Agaram : கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் அகரம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை மிகப் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த அறக்கட்டளைத் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவான நிலையில், இன்று 2025, ஆகஸ்ட் 3ம் தேதியில் பிரம்மாண்டமாக விழா நடைபெற்றுள்ளது.

Suriya : அகரம் அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழா.. மாஸ் என்ட்ரி கொடுத்த சூர்யா!
சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Aug 2025 17:30 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில்  இறுதியாக வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ (Retro) இந்த படமானது சுமார் ரூ 232 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த வசூலில் சுமார் ரூ 10 கோடியை நடிகர் சூர்யா, தான் வைத்திருக்கும் அகரம் அறக்கட்டளைக்கு (Akaram Foundation) நன்கொடையாக வழங்கியிருந்தார். இது குறித்த தகவல்கள் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வந்தது. நடிகர் சூர்யா, படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்காக இந்த அகரம் என்ற அறக்கட்டளையைத் தொடங்கினார்.

இந்த அறக்கட்டளையானது பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்குக் கல்வி என பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் கொடுத்து வருகிறது. இந்த அறக்கட்டளையில், விதை என்ற நிலை ஆரம்பமாகி, சுமார் 15 ஆண்டுகள் (15 Years Of Agaram) நிறைவடைந்த நிலையில்,  பெரிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, ரெட்ரோ பாடலுக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : அஜித்திற்கு மங்காத்தா மாதிரி, நாகர்ஜுனாவிற்கு கூலி – நடிகர் ரஜினிகாந்த்

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் வீடியோ :


அகரம் அறக்கட்டளையின் 15வது ஆண்டு நிறைவு விழாவில், நடிகரும் சூர்யாவின் சகோதரருமான கார்த்தியும் கலந்துகொண்டார். மேலும் தயாரிப்பாளர் எஸ். தாணு, கமல்ஹாசன் மற்றும் வெற்றிமாறன் போன்ற பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியானது சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. நடிகர் சூர்யா சமீபத்தில் அகரம் அறக்கட்டளையில் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்திருந்த நிலையில், அதைத் தொடர்ந்து அகரம் அறக்கட்டளையின் 15வது ஆண்டு நிறைவு தினத்தையும் கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சூர்யாவின் 46வது படத்தில் இணையும் விடுதலை பட நடிகை? வைரலாகும் தகவல்!

சூர்யாவின் புதிய திரைப்படங்கள்

நடிகர் சூர்யா, ரெட்ரோ திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், வரும் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் சூர்யா46 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.