Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அஜித்திற்கு மங்காத்தா மாதிரி, நாகர்ஜுனாவிற்கு கூலி – நடிகர் ரஜினிகாந்த்

Rajinikanth about Nagarjuna Character in Coolie movie: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியது தற்போது ரசிகரக்ளிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அஜித்திற்கு மங்காத்தா மாதிரி, நாகர்ஜுனாவிற்கு கூலி – நடிகர் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் மற்றும் நாகர்ஜுனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Aug 2025 15:16 PM

லியோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) அடுத்ததாக இயக்கி வரும் படம் கூலி. இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று 2-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் கலாநிதிமாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என பலர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் குறிப்பாக நடிகர் நாகர்ஜுனா குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில் முதலில் நடிகர் நாகர்ஜுனாவின் தோற்றம் மற்றும் முடி குறித்து பேசியபோது அவர் அப்படியே அதை மெயிண்டன் பன்றாரு. எப்படி இவரு மட்டும் இப்படி இருக்கார் என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் உடற்பயிற்சி தான் காரணம் என்று கூறியதாகவும் தெரிவித்து இருந்தார்.

கூலி படத்தில் நடிகர் நாகர்ஜுனாவின் கதாப்பாத்திரம்:

மேலும் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது நடிகர் ரஜினிகாந்த் நாகர்ஜுனாவின் கதாப்பாத்திரம் கூலி படத்தில் எப்படி இருக்கும் என்றால், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தில் அஜித் கூறும் வசனம் போல எவ்வளவு நாள் தான் நானும் நல்லவனாவே நடிக்கிறது என்பது போல இந்தப் படத்தில் நடித்து உள்ளார் நாகர்ஜுனா.

இந்த நிலையில் முன்னதாக நடிகர் நாகர்ஜுனா ஒரு பேட்டியில் பேசியது போல இந்தப் படத்தில் நான் பேசிய கெட்ட வார்த்தை போல என் வாழ்க்கையில் நான் பேசியது இல்லை. இந்தப் படத்தைப் பார்த்து ஃபேமிலி ஆடியன்ஸ் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பது குறித்து பார்க்க ஆவளுடன் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!