Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

AR Murugadoss: சிக்கந்தர் படம் தோல்வி.. காரணம் சொன்ன ஏ.ஆர். முருகதாஸ்!

AR. Murugadoss About Sikandar Movie Failure : பாலிவுட் சினிமாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சிக்கந்தர். இப்படத்தில் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், சிக்கந்தர் படத்தின் தோல்வி குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

AR Murugadoss: சிக்கந்தர் படம் தோல்வி.. காரணம் சொன்ன ஏ.ஆர். முருகதாஸ்!
ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சல்மான்கான்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Aug 2025 12:36 PM

இந்தி சினிமாவில் நடிகர் சல்மான்கானின் (Salman Khan) முன்னணி நடிப்பில் வெளியான திரைப்படம் சிக்கந்தர் (Sikandar). இந்த திரைப்படத்தைத் தமிழ் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ( AR. Murugadoss) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில், இந்த படமானது இந்தி மொழியை மையமாகக் கொண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோடியாக, பான் இந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் நடிப்பில் வெளியான இப்படமானது படு தோல்வியடைந்தது என்றே கூறலாம். இந்த படத்தின் ரிலீஸின்போது பல விமர்சனங்கள் வந்திருந்தது. இந்த படத்தில் நடிகர் சல்மான்கான் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் வயது வித்தியாசம் குறித்தும் பல நெகடிவ் விமர்சனங்கள் வெளியாகியிருந்தது. இப்படம் கடந்த 2025 மார்ச் 30ம் தேதியில் வெளியானது.

இந்த படமானது வெளியாகி மக்களிடையே பலவிதமான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படமானது திரையரங்குகளில் மக்களின் வரவேற்பைப் பெறாமல் படு தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். முருகதாஸ், சிக்கந்தர் படத்தின் தோல்விக்கு மொழிதான் முக்கிய காரணம் எனப் பேசியுள்ளார். இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : கருப்பு படத்தில் என் கதாப்பாத்திரம் இப்படிதான் இருக்கும் – நடிகை சுவாசிகா ஓபன் டாக்!

சிக்கந்தர் பட தோல்வி குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு :

அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், “தாய் மொழியில் படத்தை இயக்குவது பெரிய பலம். ஏனென்றால் தினம் தினம் என்ன நடக்கிறது என்பது நமக்கு எளிதாகத் தெரியும். அந்த விஷயங்களை, நாம் படத்தின் காட்சிகளில் வைக்கும்போது, மக்கள் மத்தியில் ஒரு இணைப்பு இருக்கும். ஆனால் வேறு மொழிகளில் படத்தை பண்ணும்போது, அன்றைய நாளில் என்ன நடக்கிறது. அந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது. வெறும் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை நம்பி மட்டுமே படத்தைப் பண்ணவேண்டும். அப்படிப்பார்க்கும்போது, தமிழ் பெரிய பலம், தெலுங்கு ஓகேதான் .

இதையும் படிங்க : ‘நாம் சாதித்துவிட்டோம்’.. கிங்டம் படம் குறித்து ராஷ்மிகா மந்தனா மகிழ்ச்சி

சிக்கந்தர் படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்ட பதிவு :

தெலுங்கு மொழியில் கிட்டத்தட்டத் தமிழ் மொழியைப் போலத்தான் இருக்கும். அதை எளியதாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இந்தி எல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது, ஏனென்றால் தமிழை நாம் எழுதுவோம், அதை ஆங்கிலத்தில் மாற்றி, பின் இந்தியில் மாற்றித்தான் படத்தின் கதையும் உருவாகும். அவர்கள் என்ன பேசுகிறார்கள் எனத் தெரிந்துகொள்ளலாம் தவிர, சரியாக அவர்கள் பேசுகிறார்களா எனத் தெரியாது. மொழி தெரியாத ஊரில் படம் பண்ணும்போது, நாம் மாற்றுத்திறனாளி போலத்தான் உணரமுடியும், தாய் மொழியில் படம் எடுப்பது போல பலத்துடன் இயக்கமுடியாது என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அந்தநிகழ்ச்சியில் கூறியிருந்தார் .