Rashmika Mandanna : ‘நாம் சாதித்துவிட்டோம்’.. கிங்டம் படம் குறித்து ராஷ்மிகா மந்தனா மகிழ்ச்சி
Rashmika Mandanna X Post : தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில், தெலுங்கு சினிமாவில் மிகப் பிரமாண்டமாக வெளியாகியிருக்கும் திரைப்படம் கிங்டம். இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படம் வெளியீட்டைத் தொடர்ந்து, நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட எக்ஸ் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவரின் முன்னணி நடிப்பில் 12வது திரைப்படமாக வெளியாகியிருப்பது கிங்டம் (Kingdom). இந்த திரைப்படத்தைத் தெலுங்கு பிரபல இயக்குநர் கௌதம் தின்னனுரி (Gowtam Tinnanuri) இயக்கியுள்ளார். இந்த கிங்டம் திரைப்படமானது பின் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது. பான் இந்தியப் படமாக உருவாகியிருக்கும் நிலையில், இப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri borse) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடியும் இப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்குத் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார்.
இந்த படமானது இன்று 2025, ஜூலை 31ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிவருகிறது. இந்நிலையில் பான் இந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), கிங்டம் திரைப்படத்தைக் குறித்துப் பதிவை வெளியிட்டுள்ளார். அதற்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ரியாக்ட் செய்த கருத்தும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : ஆடியன்ஸ்கு நிஜமாவே பிடிக்கும்… காந்தா படம் குறித்து துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு!
நடிகை ராஷ்மிகா மந்தனா கிங்டம் படம் குறித்து வெளியிட்ட பதிவு :
I know how much this means to you and all those who love you 🥹❤️@TheDeverakonda !!
“MANAM KOTTINAM”🔥#Kingdom
— Rashmika Mandanna (@iamRashmika) July 31, 2025
இந்த பதிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா, “இது உங்களுக்கும், உங்களை நேசிக்கும் அனைவருக்கும் எவ்வளவு அர்த்தம் என்று எனக்குத் தெரியும். நாம் சாதித்துவிட்டோம் என நடிகர் விஜய் தேவரகொண்டவை, டேக் செய்து, நடிகை ராஷ்மிகா மந்தனா எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. அந்த பதிவின் கீழ் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நாம் சாதித்துவிட்டோம்” எனக் கருத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பட வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : விஜய் பேசுவதில் எந்த ஆச்சரியமும் எனக்கில்லை.. ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திரைப்படங்கள் :
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும், பல வருடங்களாகச் சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த திரைப்படங்கள் எல்லாம் பான் இந்தியா அளவிற்கு சூப்பர் ஹிட்டாகியிருந்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவ்வரிகள் இருவரின் ஜோடி படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என இரு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்று வரையிலும் இவர்கள் ஜோடி சேரும் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படங்களைத் தொடர்ந்து சுமார் 6 வருடமாக இருவரும் இணைந்து எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.