ஜிவி பிரகாஷின் பிளாக்மெயில் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு?
GV Prakash Kumar Blackmail Movie: நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருந்த பிளாக்மெயில் படத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மறுவெளியீட்டு தேதி குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜி.வி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு என்ற பாடலுக்கு தனது மழலை குரலில் இவர் பாடியது தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. ஆம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இவரது சொந்த மாமா என்பதால் குழந்தையாக ஜிவி பிரகாஷ் குமார் இருக்கும் போதே அவரது குரலை உலகிற்கு அறிமுகம் செய்துவிட்டார். இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் அறிமுகம் ஆன முதல் படமே அவருக்கு அமோக வரவேற்பைப் கொடுத்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்து வந்தார். இப்படி இசையமைப்பாளராக ஹிட் கொடுத்து வந்த ஜிவி பிரகாஷ் குமார் நடிகராகவும் ஹிட் கொடுக்க நினைத்தார்.
அதனைத் தொடர்ந்து படங்களில் நடிகராக நடிக்கத் தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் படங்கள் அதிகமாக அடல்ட் கண்டெண்ட் நிறைந்ததாக இருந்தது. இதற்காக பல விமர்சனக்களும் எழுதது. அதனைத் தொடர்ந்து மக்களுக்கு பிடிக்கும் கதைகளில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினாலும் தனது இசையமைப்பாளர் பணியை விடாமல் அதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.




வெளியீட்டில் இருந்து தள்ளிப்போகும் ஜிவி பிரகாஷின் பிளாக்மெயில் படம்:
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கிங்ஸ்டன். கடலை சுற்றி வாழும் மக்கள் கடலுக்குள் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும் அது கடலுக்கு செல்லும் அனைவரையும் கொன்றுவிடும் என்று ஒரு மூட நம்பிக்கையில் இருக்கும் மக்களுக்கு அந்த கடலுக்குள் சென்று எதுவும் இல்லை என்றும் யாரும் பயப்பட வேண்டாம் என்பதற்கக ஒரு முயற்சி எடுக்கும் இளைஞனாக நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து இருந்தார்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிளாக்மெயில் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் கூட வெளியீட்டு தேதி குறிப்பிட்டு படக்குழு அதனை உறுதி செய்து இருந்தது. ஆனால் தற்போது படத்தில் வெளியீட்டு தேதியைப் படக்குழு ஒத்திவைத்துள்ளதாகவு மறுவெளியீட்டு தேதி குறித்து தற்போதைக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
இணையத்தில் கவனம் பெரும் எக்ஸ் தள பதிவு:
#BLACKMAIL — Postponed From August 1 2025 Theatrical Release!! pic.twitter.com/JuAdJuonEW
— Saloon Kada Shanmugam (@saloon_kada) July 30, 2025
Also Read… திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!