Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kingdom Movie Review : கிங்டம் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் ரிவியூ இதோ!

Vijay Deverakonda's Kingdom | இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் உருவாகி வந்த கிங்டம் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் எக்ஸ் விமர்சனம் குறித்து பார்க்கலாம்.

Kingdom Movie Review : கிங்டம் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் ரிவியூ இதோ!
கிங்டம் திரைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Jul 2025 07:42 AM

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடப்பில் தயாராகி வந்த கிங்டம் திரைப்படம் இன்று (ஜூலஒ 31, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், அது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. கௌதம் தின்னனுரி இயக்கிய ஜெர்சி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கௌதம் தின்னனுரி, விஜய் தேவரகொண்டா, அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியில் இது ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் காட்சிகள் வெளியாகியுள்ளது. அது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள விமர்சனங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் – எஸ்க் விமர்சனம் இதோ

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், திரைப்படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

முதல் பாதி சிறப்பாக உள்ளது

கிங்டம் திரைப்படம் குறித்து கூறியுள்ள ஒருவர், திரைப்படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளது. குறிப்பாக காட்சிகள் மற்றும் திரைப்படத்தின் தரம் மிக சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!

இரண்டாவது பாதி மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

கிங்டம் திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ள மற்றொருவர் மிக சிறப்பான தொடக்கம். சகோதரத்துவம், காதல் என அனைத்தும் சமநிலையில் உள்ளது. அனிருத்தின் பின்னணி இசை பக்க பலமாக அமைந்துள்ளது. விஜய் தேவரகொண்டா திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார். முதல் பாதி இரண்டாவது பாதியின் மீதான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

இரண்டாம் பாதி சிறப்பாக உள்ளது

முதக் பாதி சிறப்பாக உள்ளதை போலவே இரண்டாம் பாதியும் சிறப்பாக உள்ளதாக இந்த நபர் கூறியுள்ளார்.