கருப்பு படத்தில் என் கதாப்பாத்திரம் இப்படிதான் இருக்கும் – நடிகை சுவாசிகா ஓபன் டாக்!
Actress Swasika: தமிழ் சினிமாவில் தற்போது நாயகிகளை விட அதிகம் கவனம் பெற்றவராக வலம் வருபவர் நடிகை ஸ்வாசிகா. கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வரும் நிலையில் மாதத்திற்கு ஒரு படம் இவர் நடித்த படம் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வைகை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் சுவாசிகா (Actress Swasika). இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 15 வருடங்களாகப் பலப் படங்களில் நடித்துள்ளார். ஆனால் இத்தனைப் படங்களில் நடித்த இவருக்கு கிடைக்காத ஒரு பிரபலம் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான் லப்பர் பந்து படத்தின் மூலம் கிடைத்து. இந்தப் படம் வெளியான பிறகு நடிகை சுவாசிகாவின் நடிப்புத் திறமையும் வெகுவாகப் பாராட்டப் பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகை சுவாசிகா இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அவர் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இது மட்டும் இன்றி தற்போது தெலுங்கு படங்களிலும் நடிகை சுவாசிகா கமிட்டாகி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இறுதியாக நடிகை சுவாசிகா நடிப்பில் தமிழில் வெளியான மாமன் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சூரியின் அக்காவாக நடித்து அசத்தி இருந்தார். இவர்களின் பாசம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தகது.




கருப்பு படத்தில் எனது கதாப்பாத்திரம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விசயம்:
இந்த நிலையில் நடிகை சுவாசிகா தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் அவரது வளர்ப்பு தாயாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக சூர்யா உடன் நடிகை சுவாசிகா இணைந்து நடித்துள்ளார்.
இந்த கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தன்னிடம் கதை கூற வந்தபோது நிகழ்ந்த சம்பவம் குறித்து நடிகை சுவாசிகா வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் ஆர்.ஜே.பாலாஜி சுவாசிகாவிடம் கூறியாதாது சமீபத்தில் அவர் நடித்து வரும் கதாப்பாத்திரத்திற்கும் இந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரத்திற்கும் நிறைய வித்யாசம் உள்ளது என்று அவர் கூறியதாகவும் தெரித்தார்.
Also Read… நடிப்பிற்காக எவ்வளவு கடுமையாக உழைக்கவும் நான் தயார் – டிஎன்ஏ பட நடிகை நிமிஷா சஜயன்
தொடர்ந்து பேசிய நடிகை சுவாசிகா எனக்கும் எனது கதாப்பாத்திரத்தில் வித்யாசம் காட்ட வேண்டும் என்று விருப்பம் இருந்தது. அதனால் இந்த கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் விருப்பமாக இருந்தது என்றும் நடிகை சுவாசிகா அந்தப் பேட்டியில் தெரிவித்து உள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றது.
நடிகை சுவாசிகாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… நீங்க யாரும் எதிர்பார்க்காத ஒன்னு கூலி படத்தில இருக்கு – நடிகை ஸ்ருதி ஹாசன்!