Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madharaasi : சாய் அபயங்கரின் குரலில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலிருந்து ‘சலம்பல’ என்ற பாடல் வெளியானது!

Madharaasi Movie First Song : கோலிவுட் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்த் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு , படக்குழு சலம்பல என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளது. தற்போது இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Madharaasi : சாய் அபயங்கரின் குரலில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலிருந்து ‘சலம்பல’ என்ற பாடல் வெளியானது!
மதராஸி திரைப்படம்
Barath Murugan
Barath Murugan | Updated On: 31 Jul 2025 20:47 PM

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) 23வது திரைப்படமாக ரிலீசிற்கு தயாராகிவருவது மதராஸி (Madharaasi). இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth )நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் ஏஸ் (Ace) படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மதராஸி திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR. Murugadass) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா வரை பல நடிகர்களை வைத்துப் படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ரஜினிகாந்த்தின் தர்பார் படத்தை அடுத்தாக, 4 வருடங்களுக்குப் பின்  மதராஸி படத்தை இயக்கியுள்ளார். இந்த மதராஸி திரைப்படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் சைக்கோ திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார்.

சுமார் 2 வருடங்ககளுக்கு பின் சிவகார்த்திகேயனின் படத்திற்கு, இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், படக்குழு முதல் பாடலை வெளியிட்டுள்ளது. சலம்பல (Salambala) என்ற பாடலை, இளம் இசையமைப்பாளரும், பாடகருமான சாய் அபயங்கர் (Sai Abhyankkar) பாடியுள்ளார். காதல் தோல்வி குறித்த இப்பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : விஜய் பேசுவதில் எந்த ஆச்சரியமும் எனக்கில்லை.. ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!

மதராஸி படத்தின் முதல் பாடல் ரிலீஸ் பதிவு :

மதராஸி திரைப்படத்தின் கதைக்களம் :

இந்த் மதராஸி திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதைகளைக் கொடு உருவாகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் விக்ராந்த், பிஜு மேனன், வித்யுத் ஜம்வால், ஷபீர் கல்லாரக்கல் மற்றும் பிரேம் குமார் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.இந்த படமானது முற்றிலும் அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ.ஆர். முருகதாஸும் கூட, இந்த படமானது கஜினி மற்றும் துப்பாக்கி போன்ற இரு படங்களின் ஸ்டைலில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கருப்பு படத்தில் என் கதாப்பாத்திரம் இப்படிதான் இருக்கும் – நடிகை சுவாசிகா ஓபன் டாக்!

இவ்வாறு கூறியிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படமானது தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இடையில் 1 மாதம் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.