சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன் – வைரலாகும் வீடியோ!
Agaram Foundation: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு உதவும் நோக்கில் அகரம் என்ற அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி நடத்தி வருகிறார். இன்று அந்த அறக்கட்டளை தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதற்காக விழா ஒன்று நடத்தப்பட்டது.

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). தமிழ் சினிமாவில் தொடர்ந்து நாயகனாக நடித்து வரும் இவர் அவ்வப்போது மற்ற மொழிகளில் கேமியோ ரோலிலும் நடித்து வருகிறார். நடிகர் சூர்யாவை மக்களுக்கு படங்களை பார்த்து மட்டும் அவ்வளவு பிடித்தது என்பதை விட அவரது நல்ல மனசு பலரையும் அவருக்கு ரசிகராக மாற்றியது. அப்படி அவர் என்ன செய்துவிட்டார் என்றால் நல்லா படிக்க முடிந்தும் பணம் இல்லாமல் பாதியிலேயே நின்றுபோகும் மாணவர்களின் வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையாக இருந்து இருக்கிறார். ஆம் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்றாலும் மேல் படிப்பிற்கு போதிய பண வசதி இல்லாமல் படிப்பை நிறுத்தியவர்கள் ஏராளம். அவர்களின் படிப்பை பாதியில் நிற்காமல் தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்யும் நோக்கில் நடிகர் சூர்யா தொடங்கியதுதான் அகரம் அறக்கட்டளை.
15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த அறக்கட்டளை மூலம் படித்த மாணவர்கள் பலர் பல இடங்களில் பெரிய வேலைகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாணவர்களின் வாழ்க்கை மட்டும் இன்றி அவர்களின் படிப்பிற்கு உதவி செய்து அவர்களின் குடும்பத்தையும் அடுத்த தரத்திற்கு எடுத்துச் செல்ல உதவியாக இருந்துள்ளார் நடிகர் சூர்யா.




அகரம் விழாவில் கலந்துகொண்ட்ட இயக்குநர் வெற்றிமாறன்:
இந்த நிலையில் இந்த அறக்கட்டளை தொடங்கி 15 வருடங்களை நிறைவு செய்த்துள்ளது. இதற்கான விழா இன்று நடைப்பெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். அதில் குறிப்பாக இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
காரணம் வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து அது குறித்த அடுத்தக்கட்ட அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் படம் ட்ராப்பாகி விட்டது என்றும் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இடையே பிரச்னை என்றும் பல வதந்திகள் சினிமா வட்டாரங்களில் பரவி வந்தது. இந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் வீடியோ:
#Suriya – #VetriMaaran – #Thanu at Agaram Event💥 pic.twitter.com/P9RzD6Jamu
— AmuthaBharathi (@CinemaWithAB) August 3, 2025