Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dulquer Salmaan : துல்கர் சல்மானின் ‘காந்தா’ ஷூட்டிங் நிறைவு.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

Dulquer Salmaans Kaantha Movie : மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் விறுவிறுப்பாகத் தயாராகி வரும் திரைப்படம் காந்தா. இந்த படத்தை நடிகர் ராணா டகுபதி தயாரித்துவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

Dulquer Salmaan : துல்கர் சல்மானின் ‘காந்தா’ ஷூட்டிங் நிறைவு.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
காந்தா திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Jul 2025 23:21 PM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்தது வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில்தான் இந்திய திரைப்படமாக உருவாகிவருவது காந்தா (Kaantha). இந்த திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு நிலா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக துல்கர் சல்மானுடன் காந்தா திரைப்படத்தில் இணைந்திருந்தார். இந்த படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான ராணா டகுபதி (Rana Daggubati) தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக , தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்துவந்த நிலையில், தற்போது ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதற்குக் காரணம் பெரிய தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : தலைவன் தலைவி படம் ஒரு உண்மை கதை – இயக்குநர் பாண்டிராஜ்!

கந்தா திரைப்படத்தின் ரிலீஸ் தாமதம் :

துல்கர் சல்மானை மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம்தான் காந்தா. இதில் இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான ராணாவும் மற்றும் நடிகர் சமுத்திரகனியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்தது. அதை அடுத்து இப்படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியிருந்தது.

இதையும் படிங்க : அப்படிப்பட்டவருடன் டேட்டிங் செல்வேன்.. விமர்சனத்தில் சிக்கிய ராஷ்மிகா!

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் ரிலீஸ் தாமதத்திற்காகக் காரணமும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸை நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கும் நிலையில், திரையரங்கு ரிலிஸ் உரிமையைப் பெற மற்ற தயாரிப்பு நிறுவனங்களால் தாமதமாகிவருவதாக கூறப்படுகிறது.

துல்கர் சல்மான் வெளியிட்ட காந்தா திரைப்படத்தின் போஸ்டர் :

காந்தா திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்தப் படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உருவாகியிருக்கிறது. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 05ம் தேதியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில், விரைவில் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.