லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி & விக்ரம் படங்கள் பிடிக்கும் – நடிகர் நாகர்ஜுனா
Actor Nagarjuna: தெலுங்கு சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்தி வைத்துள்ளார் நடிகர் நாகர்ஜுனா. சினிமாவில் இவரது மகன்கள் முன்னணி நடிகர்களாக வந்த பிறகும் தன்னுடைய இடத்தை விட்டுகொடுக்காமல் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டோலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம வருபவர் நடிகர் நாகர்ஜுனா (Actor Nagarjuna Akkineni). தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேலாக ஸ்டார் நடிகராக வலம் வரும் இவர் தற்போது உள்ள இளைஞர்களுடன் போட்டிப்போடும் விதமாகவும், இளம் நடிகர்கள் பொருமாபைப்படும் உடல் அமைப்பிலும் தோற்றத்திலும் தன்னை வலுவாக வைத்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் நடைப்பெற்ற கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) கூறியிருந்தார். எப்படிங்க இப்படி இருக்கீங்க என்று நாகர்ஜுனாவிடம் கேட்க அதற்கு அவர் உடற்பயிற்சி என்று கூறினார் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர் நாகர்ஜுனா தற்போது கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. அதில் நடிகர் நாகர்ஜுனா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




லோகேஷ் கனகராஜின் படங்கள் குறித்து பேசிய நாகர்ஜுனா:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் நாகர்ஜுனா, கூலி படத்தின் கதையை கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
அதனைத் தொடர்ந்து நான் லோகேஷ் கனகராஜிடம் கேட்ட முதல் கேள்வி இதனை ரஜினிகாந்த் சார் ஏற்றுக்கொண்டாரா என்பதுதான். ஏன்னா படத்தில் எனக்கும் ரஜினிகாந்த் சார் கதாப்பாத்திரம் போல மிகவும் வலிமையானதாக என் கதாப்பாத்திரமும் இருக்கும் என்றும் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் நாகர்ஜுனாவின் வீடியோ:
“#Kaithi & #Vikram are my 2 Favourite films of Lokesh🫶. When I heard #Coolie script, it’s very interesting🔥. The first question I asked was whether #Rajinikanth sir accepted to it❓. Because my role was very strong & equal to Rajini sir🌟💥”
– #Nagarjuna pic.twitter.com/PxiKdpCIxK— AmuthaBharathi (@CinemaWithAB) August 4, 2025