Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முறுக்கு மீசை… வித்தியாசமான தோற்றத்தில் ஹெச்.ராஜா – வைரலாகும் ‘கந்தன் மலை’ பட ஃபர்ஸ்ட் லுக் -கதை இதுவா?

H.Raja's Kandhan Malai: பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கந்தன் மலை என்ற படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போஸ்டரில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

முறுக்கு மீசை… வித்தியாசமான தோற்றத்தில் ஹெச்.ராஜா – வைரலாகும் ‘கந்தன் மலை’ பட ஃபர்ஸ்ட் லுக் -கதை இதுவா?
ஹெச்.ராஜா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 Aug 2025 22:40 PM

 பாஜக (BJP) தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஹெச். ராஜா (H.Raja), இப்போது ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். அரசியலைத் தாண்டி சினிமா துறையில் நடிகராக களமிறங்கியுள்ள அவர், கந்தன் மலை எனும் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 03, 2025 அன்று வெளியாகியுள்ளது.  முன்னதாக சமூக வலைதளங்களில் ஹெச். ராஜா தமிழ் சினிமாவில் நடிகராக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. ‘கந்தன் மலை’ என்ற இந்த திரைப்படத்தை வீர முருகன் என்பவர் எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை  சிவ பிரபாகரன் மற்றும் சந்திரசேகர் தயாரிக்கின்றனர்.

முறுக்கு மீசையுடன் ஹெச்.ராஜா

வெளியாகிய போஸ்டரில், ஹெச். ராஜா வழக்கமான அரசியல்வாதி தோற்றத்தில் இருந்து மாறுபட்டு, முறுக்கு மீசை, கழுத்திலும் கையிலும் ருத்ராட்ச மாலையுடன் கோவிலின் வாயிலில் பெருங்கூட்டத்துடன் வருகிறார். மற்றொரு போஸ்டரில் அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. போஸ்டரில் தர்மப்போராளி ஹெச். ராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  தற்போது சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : சினிமாவில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித் குமார் – வைரலாகும் ஆதிக் ரவிச்சந்திரனின் எக்ஸ் தள பதிவு!

ஹெச்.ராஜாவின் கந்தன் மலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

 

திருப்பரங்குன்றம் பின்னணியா?

‘கந்தன் மலை’ என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அமைந்துள்ள மலைக்குப் பொதுவாக பயன்படுத்தப்படும் பெயர் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சர்ச்சை எழுந்த போது, அது சிக்கந்தர் மலை அல்ல, கந்தன் மலை  ஹெச். ராஜா செய்தியாளர்களின் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.  இதனையடுத்து, அவரது நடிப்பில் உருவாகும் இந்த கந்தன் மலை படத்தின் கதை திருப்பரங்குன்றத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதுபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதையும் படிக்க : அஜித்திற்கு மங்காத்தா மாதிரி, நாகர்ஜுனாவிற்கு கூலி – நடிகர் ரஜினிகாந்த்

சினிமாவில் இருந்து அரசியலுக்கு எம்ஜிஆர் துவங்கி தற்போது விஜய் வரை ஏராளமானோர் களமிறங்கியிருக்கின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் திரைப்படங்களில் நடிப்பது என்பது தமிழகத்தில் அபூர்வம். ஆனால் ஹெச். ராஜா இந்தப் படத்தின் வாயிலாக திரைத்துறைக்கு நுழைந்திருப்பது, அவரது புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.  ‘கந்தன் மலை’ திரைப்படம் ஒரு ஆன்மிக படமாக மட்டுமல்லாமல் அரசியல் கருத்துகளும் அதில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போஸ்டரிலேயே அத்தகைய புள்ளிகள் தென்படுவதால், எதிர்வரும் நாட்களில் இதற்கான ட்ரெய்லர், பாடல்கள் போன்ற அப்டேட்டுகள் மேலும் பரபரப்பை உருவாக்கலாம்.