சினிமாவில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித் குமார் – வைரலாகும் ஆதிக் ரவிச்சந்திரனின் எக்ஸ் தள பதிவு!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரை ரசிகர்கள் அன்புடன் தல என்று அழைப்பார்கள். சினிமாவில் தனது உழைப்பாள் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் அஜித் குமார் சினிமாவில் இன்றுடன் தனது 33 வருடங்களை நிறைவு செய்கிறார்.

கோலிவுட் சினிமாவில் கடந்த 1990-ம் ஆண்டு நடிகர்கள் சுரேஷ் மற்றும் நதியா நடிப்பில் வெளியான என் வீடு என் கணவர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார் நடிகர் அஜித் (Ajith Kumar). இதனைத் தொடர்ந்து வேறு எந்தப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்காத நடிகர் அஜித் குமார் கடந்த 1993-ம் ஆண்டு இயக்குநர் செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் அஜித் குமார். அதனைத் தொடர்ந்து பலதரப்பட்டப் படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தற்போது வலம் வருகிறார். அஜித் குமார் தனது படம் ஒன்றில் கூறும் வசனம் போல என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா என்று கூறுவது போல சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் வந்து தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்து தற்போது வரை 63 படங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாளி, அமர்களம், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெள்ளாம் உன்வாசம், ரெட், வில்லன், கிரீடம், ஏகன், பில்லா, வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம் மற்றும் துணிவு என பல படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




அஜித் குமாரின் 33 வருட அற்புதமான பயணம்:
இந்த நிலையில் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இவர் ஒரு தீவிர அஜித் ரசிகர் ஆவார். அதனாலேயே அஜித் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு படத்தை எடுத்து இருந்தார். இந்தப் படம் அஜித் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தகது.
Also Read… யோவ் உன்ன நான் கேட்டனா ? இல்ல… நான் கேட்டனா? – லோகேஷ் கனகராஜ் குறித்து கலகப்பாக பேசிய ரஜினிகாந்த்
இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரின் 64-வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார். இதுகுறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சினிமாவில் 33 வருடங்களை நிறைவு செய்துள்ள நடிகர் அஜித் குமாரை வாழ்த்தி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
33 years of phenomenal journey💥💥💥💥💥your a rare gem 💎 with unmatched hardwork❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻such a pure hearted soul❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 love you sir❤️❤️❤️❤️🙏🏻🙏🏻 #33YearsOfAJITHISM pic.twitter.com/4KmIORjLFI
— Adhik Ravichandran (@Adhikravi) August 3, 2025