Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Housemates X Review : தர்ஷனின் ‘ஹவுஸ்மேட்ஸ்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Darshans Housemates Movie X Review : தமிழ் சினிமாவில் கனா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தர்ஷன். இவரின் முன்னணி நடிப்பில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருக்கும் படம் ஹவுஸ்மேட்ஸ். இந்த படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Housemates X Review : தர்ஷனின் ‘ஹவுஸ்மேட்ஸ்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
ஹவுஸ்மேட்ஸ் படImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Aug 2025 17:32 PM

நடிகர் தர்ஷன் (Darshan) தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் சிறு நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு வெளியான கனா (Kanaa) என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தை அடுத்து, தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். மேலும் துணிவு, அயலான் போன்ற படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் இவர் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் படம் ஹவுஸ்மேட்ஸ். இந்த படத்தை இயக்குநர் டி. ராஜவேல் (T. Raja Vel) இயக்கியுள்ளார். இந்த படத்தைத் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) எஸ்கே ப்ரொடக்ஷன் (SK Production) நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.

இந்த படமானது இன்று 2025 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து விவரமாகப் பார்க்கலாம். இந்த படமானது ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : புது கிளைமேக்ஸுடன்.. ரசிகர்களைக் கவரும் தனுஷின் ‘அம்பிகாபதி’ திரைப்படம்!

ஹவுஸ்மேட்ஸ் திரைப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் :

இந்த ஹவுஸ்மேட்ஸ் திரைப்படமானது வித்தியாசமான திரைக்கதையைக் கொண்டுள்ளதாம். நகைச்சுவை, எமோஷனல் மற்றும் திரில்லர் எனப் பலவித ஜானர்களை உள்ளடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் தர்ஷன், அர்ஷா பைஜூ இவர்களின் நடிப்பும் மிக அருமையாக உள்ளதாம். மேலும் இப்படத்தின் பின்னணி இசையையும் அருமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மாபெரும் வெற்றி.. ‘தலைவன் தலைவி’ வசூல் நிலவரம் இதோ!

ஹவுஸ்மேட்ஸ் படத்தின் கதைக்களம் எப்படி இருக்கு :

இந்த திரைப்படத்தின் கதைக்களமானது, புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையேடு புத்த வீட்டிற்குள் குடியேறுகின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் அமானுஷ்யங்கள், எமோஷனல் மற்றும் காதல் கதைக்களத்துடன் அமைந்துள்ளது. மேலும் இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் பேண்டஸி கதையாக அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹவுஸ்மேட்ஸ் படத்தை திரையரங்கில் சென்று பார்க்கலாமா?

இந்த ஹவுஸ்மேட்ஸ் படமானது தனித்துவமான கருத்து மற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் தர்ஷன் மற்றும் அர்ஷா நடிப்பும் மிக அருமையாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ள அவர், இப்படமானது மொத்தத்தில் திரையரங்குகளில் சென்று பார்ப்பதற்கு நல்ல படம். குழந்தைகளுடன் இப்படத்தைப் பார்க்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை, காதல், எமோஷனல் போன்ற கதைக்களம் பிடித்தவர்களுக்கு இந்தப் படம் நல்ல சாய்ஸாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.