Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Deverakonda Speech : ‘உங்கள் அன்பினால் இந்த வெற்றி’ – கிங்டம் பட வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு

Kingdom Movie Success Meet : விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் திரைப்படம், உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாள் வசூல் அபாரமாக உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இப்படம் வெற்றி குறித்து விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார்

Vijay Deverakonda Speech : ‘உங்கள் அன்பினால் இந்த வெற்றி’ – கிங்டம் பட வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
விஜய் தேவரகொண்டா
C Murugadoss
C Murugadoss | Published: 31 Jul 2025 19:22 PM

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இன்று வெளியான படம் கிங்டம். இந்தப் படம் 2025, ஜூலை 31 அன்று வெளியானது. உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கௌதம் தின்னானுரி இயக்கியுள்ளார். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்கும் இதை, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய பதாகைகளின் கீழ் சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இன்று காலை முதல் காட்சி ஓடும்போதே கிங்டம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. பலரும் சோஷியல் மீடியாக்களில் கிங்டம் படத்தை புகழ்ந்து எழுதினர். இந்தியா மட்டுமின்றி அமெரிக்க பிரீமியர்களிலும் இந்தப்படம் வெற்றியை பெற்றுள்ளது. முதல் நாள் வசூலே தயாரிப்பாளர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட விஜய் தேவரகொண்டா

இந்த நிலையில், இப்படம் தொடர்பான வெற்றி கொண்டாட்டத்தில் பேசிய விஜய் தேவரகொண்டா, “கிங்டம் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் உள்ளேன். அமெரிக்க பிரீமியர்களில் இருந்து நேர்மறையான ரிவியூக்கள் வந்துள்ளது. இரவு முதல் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பலர் போன் செய்து ‘அண்ணா, நாங்கள் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளோம்’ என்று உணர்ச்சிவசப்படுகிறார்கள்.

Also Read : ‘நாம் சாதித்துவிட்டோம்’.. கிங்டம் படம் குறித்து ராஷ்மிகா மந்தனா மகிழ்ச்சி

இந்த வெற்றி உங்கள் அனைவரின் அன்பினால் சாத்தியமானது. ஊடக ஆதரவையும் என்னால் மறக்க முடியாது. நேற்று முதல் எனது தெலுங்கு மக்கள் எனக்கு எவ்வளவு பின்னால் இருக்கிறார்கள் என்பதை நான் பார்த்து வருகிறேன். ரசிகர்கள் படத்திற்காக எவ்வளவு ஆரவாரம் செய்கிறார்கள், எவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்பதை நான் பார்த்தேன்,” என்றார்.

மேலும், கடவுளின் ஆசிர்வாதத்தாலும், உங்கள் அன்பாலும்தான் இவை அனைத்தும் சாத்தியமானது. இந்த வெற்றியை பார்வையாளர்களிடையே கொண்டாட விரும்புகிறேன். விரைவில் தெலுங்கு பார்வையாளர்களையும், அமெரிக்க பார்வையாளர்களையும் சந்திப்பேன். முதலில், வியாழக்கிழமை ரிலீஸைப் பற்றி நான் பயந்தேன். ஆனால், நாக வம்சி  இந்தப் படத்தை நம்பி வியாழக்கிழமை வெளியிட்டார். இப்போது அவரது நம்பிக்கை நிறைவேறியுள்ளது. படத்தில் எனது நடிப்பிற்காக இவ்வளவு பாராட்டுகளைப் பெற்றதற்குக் காரணம் இயக்குனர் கௌதம். டீசருக்கு குரல் கொடுத்த என்டிஆர் சகோதரர், ரசிகர்கள் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.