Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thanal: அதர்வாவின் தணல் படத்திலிருந்து ‘ஆசை தீயே’ என பாடல் வெளியீடு!

Thanal Movie First Single : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அதர்வா. இவரின் நடிப்பில் தயாராகி, 1 ஆண்டுக்குப் பின் வெளியாகக் காத்திருக்கும் திரைப்படம் தணல். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ஆசை தீயே என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Thanal: அதர்வாவின் தணல் படத்திலிருந்து ‘ஆசை தீயே’ என பாடல் வெளியீடு!
அதர்வா தணல் திரைப்படம்
Barath Murugan
Barath Murugan | Published: 01 Aug 2025 13:57 PM

நடிகர் அதர்வாவின் (Athrvaa) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டிஎன்ஏ (DNA). இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் (Nelson Venkatesan) இயக்கத்தில் வெளியான இப்படமானது, திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக, அதர்வாவின் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் தயாராகி 1 ஆண்டுகளுக்கும் மேலாகி ரிலீசாகாமல் இருந்த திரைப்படம் தணல் (Thanal). இந்த படத்தை இயக்குநர் ரவீந்திர மாதவா (Ravindra Madhava) இயக்கியுள்ளார். இவர் இந்த படத்தின் மூலமாகத்தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக , தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி (Lavanya Tripathi) நடித்துள்ளார். இந்த இடமானது உருவாகி 1 ஆண்டுகளுக்கும் மேலாகும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 29ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்திலிருந்து படக்குழு முதல் பாடலை வெளியிட்டுள்ளது. ‘ஆசை தீயே‘ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க :  சித்தார்த்தின் ‘3BHK’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எப்போது, எங்குப் பார்க்கலாம்?

தணல் படத்தின் முதல் பாடல் பதிவு :

இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முன்னணி நாயகனாக நடித்துள்ளார். தணல் படத்தின் முதல் அறிவிப்பு கடந்த 2022ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வந்திருந்தது. பின் சில தயாரிப்பு நிதி பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் ரிலீசுக்கு தள்ளிப்போனது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த படத்தை டான் சேனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க : நாம் சாதித்துவிட்டோம்’.. கிங்டம் படம் குறித்து ராஷ்மிகா மந்தனா மகிழ்ச்சி

அதர்வாவின் புதிய படங்கள் :

நடிகர் அதர்வாவின் நடிப்பில் பல படங்கள் உருவாகிவருகிறது. டிஎன்ஏ படத்தைத் தொடர்ந்து, அவரின் நடிப்பில் பராசக்தி, இதயம் முரளி என இரு படங்கள் உருவாகிவருகிறது. இதில் பராசக்தி படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க, சிவகார்த்திகேயன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இந்த் படத்தில் நடிகர் அதர்வா, நடிகை ஸ்ரீலீலாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படமானது வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. பின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், இதயம் முரளி என்ற படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.