Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3BHK OTT Update : சித்தார்த்தின் ‘3BHK’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எப்போது, எங்குப் பார்க்கலாம்?

3BHK OTT Release Date Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சித்தார்த். இவரின் முன்னணி நடிப்பில் கடந்த 2025, ஜூலை 4ம் தேதியில் வெளியான திரைப்படம் 3BHK. இந்த படமானது தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, தற்போது ஓடிடியிலும் வெளியாகவுள்ளது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு குறித்து பார்க்கலாம்.

3BHK OTT Update : சித்தார்த்தின் ‘3BHK’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எப்போது, எங்குப் பார்க்கலாம்?
3BHK திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Jul 2025 17:56 PM

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஸ்ரீ கணேஷ் (Sri Ganesh). இவரின் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக வெளியாகியிருந்தது  3BHK திரைப்படம். இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடிகர் சித்தார்த் (Siddharth) நடித்திருந்தார். இந்த படமானது நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அவருடன் முக்கிய வேடங்களில் நடிகர்கள் சரத்குமார் (Sarathkumar), தேவயானி (Devayani) மற்றும் மீத்தா ரகுநாத் (Meetha Raghunath) என பல்வேறு பிரபலங்கள் இணைந்த நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025, ஜூலை 4ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில், சிம்ப்ளி சவுத் (Simply South) என்ற ஓடிடியில் வெளியாகவுள்ளது.. இது குறித்த அறிவிப்பையும் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ‘நாம் சாதித்துவிட்டோம்’.. கிங்டம் படம் குறித்து ராஷ்மிகா மந்தனா மகிழ்ச்சி

3BHK திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு பதிவு :

3BHK திரைப்படத்தின் மொத்த வசூல் :

நடிகர்கள் சித்தார்த் மற்றும் சரத்குமாரின் முன்னணி நடிப்பில் வெளியாகியிருந்த படம் 3BHK. இந்த திரைப்படமானது மிடில் கிளாஸ் குடும்பத்தினரின் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது மிடில் கிளாஸ் குடும்பம் ஒன்று சொந்தமாக வீடு கட்டுவதற்காகப் படும் கஷ்டங்கள் அதற்காக அவர்கள் சந்திக்கும் இழப்புகள் என பலவிதமான கதைகளுடன் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : விஜய் பேசுவதில் எந்த ஆச்சரியமும் எனக்கில்லை.. ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!

முற்றிலும் எமோஷனல் மற்றும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் கஷ்டங்கள் என மாறுபட்ட கதைக்களத்துடன் இந்த படமானது வெளியாகியிருந்தது. தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனமும் வாங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.