AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டாக்சிக் – துரந்தர் 2 படத்துடன் போட்டியிடும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? – வைரலாகும் தகவல்!

Love Insurance Kompaniy New Release Date: கோலிவுட் சினிமாவில் பிரபல கதாநாயாகனாக கலக்கிவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமானது இன்னும் வெளியாகாமல் உள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை பிரபல நிறுவனம் உறுதி செய்துள்ளது.

டாக்சிக் – துரந்தர் 2 படத்துடன் போட்டியிடும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? – வைரலாகும் தகவல்!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Feb 2026 12:20 PM IST

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் டியூட் (Dude). கடந்த 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படமானது சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தின் ரிலீஸிற்கு முன்னே தயாரான திரைப்படம்தான் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (love Insurance Kompany). இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கியிருந்தார். இப்படம்தான் பிரதீப் ரங்கநாதனின் 2வது படமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு பின் தயாரான இரு படங்களும் கடந்த 2025ம் ஆண்டிலே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார்.

இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, 3 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இந்த 2026 பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் புது ரிலீஸ் தேதியை மலேசிய திரைப்பட விநியோக நிறுவனம் உறுதிசெய்துள்ளது. அது உண்மையா என்பது குறித்து விவரம்.

இதையும் படிங்க: விமானநிலையத்தில் ரசிகர்கள் செய்த செயல்.. உறைந்து நின்ற ரஜினிகாந்த் – வீடியோ இதோ!

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வைரலாகும் பதிவு :

விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகியுள்ள, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமானது வரும் 2026 மாக் 19ம் தேதியில் வெளியாகவுள்ளதாம். ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. இப்படத்தின் மலேசிய ரிலீஸ் உரிமையை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ள நிலையில், அந்த நிறுவனம்தான் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளதாக போஸ்டர் ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.

டாக்சிக் – துரந்தர் 2 படத்துடன் மோதும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் :

வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் பான் இந்திய திரைப்படங்கள் பல வெளியாகவுள்ளது. அதில் நடிகர் யாஷ் நடித்த டாக்சிக் திரைப்படம், சுமார் ரூ 600 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாம். மேலும் இதையடுத்து கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் வெளியாகி சுமார் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூலை பெற்ற துரந்தர் படத்த்தின் பாகம் 2 படமும் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட சூப்பர் அப்டேட் – காமெடியுடன் வெளியான புரோமோ இதோ!

மேலும் தமிழில் கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் என்ற திரைப்படமாகும் வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படங்களின் வரிசையில் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் வெளியாகுவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த படக்குழு இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.