3BHK Movie : சித்தார்த்தின் ‘3BHK’ – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
3BHK Movie First Day Collection : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குநர்களில் ஒருவர்தான் ஸ்ரீ கணேஷ். இவரின் இயக்கத்தில் தமிழில் வெளியாகியிருக்கும் பீல் குட் திரைப்படம்தான் இந்த 3BHK. இந்த படமானது பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், இதன் முதல் நாள் வசூல் விவரம் பற்றி பார்க்கலாம்.

நடிகர் சித்தார்த்தின் (Siddharth) 40வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டது இந்த 3BHK. இந்த படத்தில் நடிகர் சித்தார்த் முன்னணி நாயகனாக நடிக்க அவருடன், நடிகர்கள் சரத்குமார் (Sarathkumar) , தேவயானி (Devayani) மற்றும் மீத்தா ரகுநாத் (Meetha Raghunath)எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Sri Ganesh) இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் இயக்கி இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். இப்படமானது நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த படத்தைத் தொடர்ந்து, இந்த 3BHK திரைப்படத்தை இயக்கியுள்ளார். குடும்ப கதைக்களத்துடன் கூடிய இப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படம் கடந்த 2025, ஜூலை 4ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமானது முதல் நாள் முடிவில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?.
திரையரங்குகளில் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்த 3BHK திரைப்படம், முதல் நாள் முடிவில் சுமார் ரூ. 3 கோடிகளை வசூல் செய்துள்ளதாம். இது குறித்த தகவல் தினத்தந்தி செய்தி தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இடைப்பட்ட நாளில் இப்படம் வெளியான நிலையில், இந்த வார இறுதியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




3BHK படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர் பதிவு :
Yes it’s Kudumbangal kondaadum vetri 😍#3BHK IN CINEMAS ✨️🤗#3BHKfromTODAY #3BHKTamil #3BHKTelugu #Siddharth @realsarathkumar @sri_sriganesh89 #Devayani @RaghunathMeetha @Chaithra_Achar_ @iYogiBabu @iamarunviswa @dineshkrishnanb #JithinStanislaus @amritramnath23… pic.twitter.com/Yd2bLhJoKy
— Shanthi Talkies (@ShanthiTalkies) July 5, 2025
3BHK திரைப்படம் எப்படி இருக்கு?
இந்த 3BHKதிரைப்படமானது முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸிற்காக உருவாக்கப்பட்ட திரைப்படம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு குடும்ப உறவுகளை பற்றி இந்தப் படம் பேசியிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சித்தார்த், சரத்குமார், தேவயானி மற்றும் மீத்தா ரகுநாத் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கின்றனர். மிடில் கிளாஸ் குடும்பமான இவர்கள் தங்களுக்காக புதிய வீடு ஒன்றை வாங்குவதற்கு திட்டம் போடுகின்றனர். அந்த வீட்டை வாங்குவதற்கு அவர்கள் படும் கஷ்டம், எமோஷனல் சம்பவங்கள் போன்றவைதான் இப்படத்தின் மைய கருவாக இருக்கிறது.
அவர்கள் வீட்டை வாங்குகிறீர்களா அல்லது இல்லையா என்பதுதான் இப்படத்தின் மீதி கதையாகும். இந்த படத்துடன் இயக்குநர் ராமின் பறந்து போ படமும் வெளியானது. கடந்த 2025, ஜூலை 4ம் தேதியில் வெளியான பீல் குட் திரைப்படமாக 3BHK மற்றும் பறந்து போ திரைப்படம் அமைந்துள்ளது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் இந்தப் படம் சுமார் ரூ 3 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் நிலையில், வார இறுதியில் இன்னும் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.