AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் இதையத்தை கடத்த மீண்டும் வருகிறது சூது கவ்வும்… ரீ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Soodhu Kavvum Movie Re Release Update: தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வருகின்றது. அந்த வரிசையில் தற்போது சூது கவ்வும் படமும் இணைந்துள்ளது. மேலும் சூது கவ்வும் படத்தின் ரீ ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

உங்கள் இதையத்தை கடத்த மீண்டும் வருகிறது சூது கவ்வும்… ரீ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
சூது கவ்வும்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Feb 2026 14:22 PM IST

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் முன்னதாக வெளியான படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். குறிப்பாக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பிறந்த நாள் வரும் போது அவர்களின் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்தப் படங்களை மீண்டும் படக்குழுவினர் ரீ ரிலீஸ் செய்து வந்தனர். ஆனால் தற்போது காதலர் தினத்தில் மட்டும் தமிழக மக்களிடையே முன்னதாக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 4 காதல் படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. வாரம் வாரம் புதுப் படங்கள் வெளியாவது போல ரீ ரிலீஸ் படங்களும் தற்போது வாரம் வாரம் வெளியாக உள்ளதாக தொடர்ந்து படக்குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற சூது கவ்வும் படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், யோக் ஜபே, அருள்தாஸ், எம்.எஸ்.பாஸ்கர், ராதா ரவி, ராதா, வெங்கடேஷ், பாய்ஸ் ராஜன், சிவகுமார், மிப்புசாமி, கஜராஜ், யோகி பாபு, பிரியங்கா, அஞ்சலி ராவ், நோபல் கே. ஜேம்ஸ், முனிஷ்காந்த், கார்த்திக் சுப்புராஜ், உதயபானு, கானா பாலா, அந்தோணி தாசன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

உங்கள் இதையத்தை கடத்த மீண்டும் வருகிறது சூது கவ்வும்:

இயக்குநர் நலன் குமாரசாமி எழுதி இயக்கிய இந்தப் படம் டார்க் காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சூது கவ்வும் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற 20-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஏப்ரல் 30 வரை வாய்ப்பு இல்லை… ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்!

சூது கவ்வும் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்